திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை திமுக சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழாவில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி கலந்துகொண்டார். அப்போது பேசிய தயாநிதி மாறன்,தயாநிதி மாறன்
“அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் மிகச்சிறப்பாக செய்வார். அதிமுக-வும், பாஜக-வும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை சிறையில் வைத்துள்ளனர். இதுநாள் வரைக்கும் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வாயை திறந்தார்களா... ஒரு கேள்வி கேட்டார்களா... ஆனால், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் 240 கேள்விகளை கேட்டுள்ளார். தி.மு.க நாடாளுமன்றம் சென்றவுடன் தமிழ்நாட்டுக்காக அவ்வளவு கேள்விகளை கேட்டுள்ளோம். நாடாளுமன்றம்
உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனவுடன் உலக அரங்கில் நடைபெறும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார். செஸ் , கேலோ இந்தியா போட்டிகள் மாவட்டம் வாரியாக நடத்தியுள்ளார்.
நாம் கட்டும் வரி பணத்தை நமக்கு முழுமையாக மத்திய அரசு கொடுப்பதில்லை. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான், மத்திய அரசு கொடுக்கிறது அதேநேரத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா திருப்பிக் கொடுக்கிறது. பா.ஜ.க தமிழ்நாட்டுக்கு எதிரானது. அதற்கு துணை போனது அதிமுக. செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள்.எடப்பாடி பழனிசாமி, வேலுமணி
கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும், எடப்பாடி மீதும், வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமானவரி, அமலாக்கதுறை சோதனை செய்யவில்லை. அவர்கள்மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம். நீங்களும் அப்படியே நடியுங்கள் என, இரு கட்சிகளிடையே ரகசிய உறவு வைத்துள்ளனர்” என்றார். `பாஜக ஆதரவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது... இபிஎஸ் செய்தது உட்சபட்ச துரோகம்!' - ஓபிஎஸ் தாக்கு
http://dlvr.it/T2b0zq
Sunday, 11 February 2024
Home »
» ``எடப்பாடி, வேலுமணி மீது ஏன் ரெய்டு நடத்தவில்லை!" - பாஜக, அதிமுக மீது பாயும் தயாநிதி மாறன்