நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, மக்களவையில் உரையாற்றினார். இன்றும் இதே தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி உரையாற்றியது குறித்து, இன்று மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ``வெங்காயம் விலை உயர்கிறது என்றபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரும் ஆணவத்துடன், 'நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. அதனால் விலையேற்றம் குறித்து எனக்குத் தெரியாது' என்றார்.நிர்மலா சீதாராமன்
கொரோனா தொற்றுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. காஸ் விலை உயர்ந்துவிட்டது. ரஷ்யாவில் நடக்கும் போர் காரணமாக மலிவு விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் விலைக்கு வாங்கி, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அம்பானி, அதானி நிறுவனங்கள். அதிலிருந்து பெற்ற கொள்ளை லாபத்தில் இந்தியர்களுக்கு என்னப் பயன் கிடைத்தது... ஆனால், பெட்ரோல் நிலையங்கள், ரயில்வே நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய செல்ஃபி பூத் வைக்க 64 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறது அரசு.
காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திரா காந்தி எமெர்ஜென்ஸி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம்சாட்டினீர்கள். இன்று, அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குகிறீர்கள். 95 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சிகள்மீது மட்டுமே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பண மதிப்பிழப்பின்போது, ஒருபக்க விளம்பரத்தில், பிரதமர் மோடியின் முழுப்படத்துடன் பேடிஎம் விளம்பரம் செய்யப்பட்டது. `இனி எல்லாம் டிஜிட்டல் மயம்' எனக் கூறினார் பிரதமர் மோடி.தயாநிதி
தற்போது அந்த பேடிஎம் நிறுவனம் மூடுவிழா கண்டிருக்கிறதே ஏன்... தமிழ்நாட்டு மக்களின் நீட் எதிர்ப்புக்காக பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், இந்த நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கிடையே தற்கொலை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்தபோது நிர்மலா சீதாராமன் அ.தி.மு.க-வைக் கைப்பற்றி, முதல்வராகி விடலாம் என்ற கனவு திட்டத்துடன் சென்னைக்கு வந்தார். அப்போது `நீட் தமிழ்நாட்டுக்கு வராது' என வாக்களித்தார். இப்போது அந்த வாக்குறுதி என்னாவானது?" எனக் கேள்வி எழுப்பினார்.Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக குறிவைக்கும் அந்த 9 தொகுதிகள் - ஓர் அலசல்
http://dlvr.it/T2R9qY
Wednesday, 7 February 2024
Home »
» `ஜெயலலிதா மறைவின்போது, அதிமுக-வை கைப்பற்ற முயன்றவர் நிர்மலா சீதாராமன்!' - மக்களவையில் தயாநிதி மாறன்