காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இம்முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல் நலத்தை காரணம் காட்டி தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இதுவரையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா காந்தி ராஜ்ய சபை தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனக்கு இருக்கும் சொத்துக்கள் குறித்த விபரத்தை தெரிவித்துள்ளார். அதில் இத்தாலியில் தனது குடும்ப பூர்வீக சொத்தில் தனக்கு பங்கு இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.27 லட்சம் என்றும், அதில் இருந்து தனக்கு வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இது தவிர தனக்கு ரூ.12.53 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் அதிகரித்து இருப்பதாகவும், 88 கிலோ வெள்ளி இருப்பதாகவும், 1.267 கிலோ தங்கம் இருப்பதாகவும், புதுடெல்லியில் ரூ.5.88 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் இருப்பதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எம்.பி.சம்பளம், வங்கியில் இருக்கும் இருப்புத்தொகைக்கு வட்டி, மியூச்சுவல் பண்ட் டிவிடெண்ட், புத்தகங்களுக்கான ராயல்டி போன்ற வகைகளில் தனக்கு வருமானம் வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு தனக்கு சொந்தமாக காரோ அல்லது மற்ற வாகனமோ இல்லை என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தியின் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரமாணப் பத்திரத்திலும் இத்தாலியில் உள்ள குடியிருப்பு சொத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்தன, ஆனால் அதன் மதிப்பை அப்போது குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2qRrV
Friday, 16 February 2024
Home »
» `இத்தாலியில் பூர்வீகச் சொத்து; புதுடெல்லியில் விவசாய நிலம்!’ - சோனியா காந்தி வேட்பு மனுவில் தகவல்