கேரள மாநிலத்தில் பா.ஜ.க நாடாளுமன்ற தொகுதியை ஒன்றுகூட இதுவரை வென்றதில்லை. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் கும்மனம் ராஜசேகர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அதுதான் கேரளா சட்டசபையில் பா.ஜ.க-வின் வெற்றியாக அமைந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை கணக்கை தொடங்காமலே உள்ளது பா.ஜ.க. ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் கால் பதிக்க பா.ஜ.க புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.
ஏற்கனவே சினேக யாத்திரை என்ற பெயரில் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து போன்றவை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை வளைக்க பா.ஜ.க அதீத முயற்சிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் கேரளாவுக்கு அடிக்கடி விஜயம் செய்து வருகிறார். அதுமட்டும் அல்லாது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்களை, நன்கு பரிச்சயமான முகங்களை கேரளாவில் களம் இறக்கவும் பா.ஜ.க தலைமை வியூகம் வகுத்து வருகிறது.காங்கிரஸ் எம்.பி சசிதரூர்
ராஜ்யசபா எம்.பி பதவி வரும் ஏப்ரலில் முடிவடைய உள்ள கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன் உள்ளிட்ட 7 சிட்டிங் அமைச்சர்களுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கவில்லை பா.ஜ.க தலைமை. அவர்களை நாடாளுமன்ற தேர்தலில் களம் இறக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா தலைநகரான திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிதரூர் சிட்டிங் எம்.பி-யாக உள்ளார். அவரை வீழ்த்தும் விதமாக மத்திய தகவல் தொழிநுட்பவியல் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை போட்டியிட வைக்க பா.ஜ.க தலைமை திட்டமிட்டுள்ளதாம். அதனால்தான் கடந்த முறை கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.மத்திய அமைச்சர் வி.முரளீதரன்
மேலும் கேரளா-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் மகாராஷ்டிரா-வில் இருந்து ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை ஆற்றிங்கல் தொகுதியில் போட்டியிட வைக்கும் விதமாக மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், திருச்சூர் தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியை களம் இறக்க பா.ஜ.க தயாராகிவருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் சுரேஷ்கோபி திருச்சூரை சுற்றியே அரசியல் செய்துவருகிறார். பா.ஜ.க இம்முறை கேரளாவில் கால்பதிக்க புது வியூகங்களை கையில் எடுத்துவருகிறது. இந்த வியூகங்கள் கைகூடுமா... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2pwM3
Friday, 16 February 2024
Home »
» சசிதரூருக்கு எதிராக மத்திய அமைச்சர்... கேரளாவில் `வி.ஐ.பி’-களை களமிறக்கும் பாஜக!