சமீபத்தில் சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இ-மெயில் நிறுவனத்தை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என சென்னை காவல்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.வெடிகுண்டு மிரட்டல்
13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்:
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி, சென்னையில் இயங்கி வரும் 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையின் பிரபலமானப் பள்ளிகளான ஆர்.ஏ.புரத்திலுள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி, திருமழிசை, அண்ணாநகர், முகப்பேர் ஆகிய இடங்களிலுள்ள சென்னை பப்ளிக் ஸ்கூல், பூந்தமல்லி, பெரம்பூர், எழும்பூர் ஆகிய இடங்களிலுள்ள சனா ஸ்மார்ட் பள்ளி, கோபாலபுரத்திலுள்ள டிஏவி ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மற்றும் பாரிமுனையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஸ்கூல் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் இமெயில் வந்தது. அந்த மெயிலில், ``நான் கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் பள்ளியில் 2 வெடிகுண்டுகள் வைத்திருக்கிறோம். இவை வெடித்து சிதறுவதற்குள், பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்ற ரீதியில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக் குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே வரவழைத்து, கிரவுண்டில் பாதுகாப்பாக கொண்டுவந்து அமர்த்தினர். அதேநேரம் காவல்துறைக்கும் அவசரமாக தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதேபோல, பல பள்ளிகளிலிருந்தும் புகார் வர, அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். இதற்கிடையில் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அவசர விடுமுறை அளிக்கப்பட்டு, குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு எந்தப் பள்ளிகளிலும் வெடிகுண்டு இல்லை, இது ஒரு வதந்தி என்பது நிரூபணமானது. அதேபோல, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே இமெயிலிலிருந்து ஒரே மாதிரியான மிரட்டல் வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விட்சர்லாந்தைச் சேர்ந்த புரோடான்(Proton mail) எனும் தனியார் நிறுவன இமெயில் நெட்வொர்க்
தீவிர விசாரணையில் சைபர் கிரைம்:
அந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த இமெயில் ஐடியை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட சென்னை காவல்துறை, சைபர் கிரைம் உதவியுடன் மெயில் வந்த ஐபி அட்ரஸை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால், மிரட்டல் மெயில் அனுப்பிய மர்ம நபர் விவரமாக தனது ஐபி அட்ரஸை எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் வெளியில் தெரியாதபடி ஹைடு செய்திருப்பது தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை, சம்மந்தப்பட்ட மெயில் ஐடி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புரோடான்(Proton mail) எனும் தனியார் நிறுவன இமெயில் நெட்வொர்க்கின் ஐடி என்பதைக் கண்டறிந்தனர்.தமிழ்நாடு காவல்துறை
இமெயில் நிறுவனத்துக்கு தடைகோரும் தமிழ்நாடு காவல்துறை:
அதையடுத்து, சென்னை காவல்துறையானது, `பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் பயன்படுத்திய இமெயில் ஐடி எந்த செல்போன் எண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது' உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு சுவிட்சர்லாந்தின் புரோடான் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், புரோடான் நிறுவனம் அதற்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது. தமிழக காவல்துறை கேட்ட தகவல்களை தர அந்நிறுவனம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் உதவியைக் கேட்டு, புரோடான் நிறுவனத்தை அணுக சென்னை காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், `புரோடான் மெயில் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கவேண்டும், அதன் இந்திய சேவையை முடக்க வேண்டும்' எனக்கோரி மத்திய மத்திய தகவல் தொடர்புதுறைக்கு சென்னை காவல்துறை பரிந்துரை கடிதம் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து, மத்திய தகவல் தொடர்பு துறையும், புரோடான் மெயில் நிறுவனத்தின் இந்திய சேவைக்கு தடைவிதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2sNw7
Saturday, 17 February 2024
Home »
» `சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... சம்பவம்!' சுவிஸ் நிறுவனத்துக்கு தடையா? - பகீர் பின்னணி