விவசாய விளைபொருள்களுக்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் கொண்டு வருதல், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, `டெல்லி சலோ' முழக்கத்துடன் பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி முற்றுகைப் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.டெல்லியை நெருங்கிய பஞ்சாப் விவசாயிகள்
இன்னொருபக்கம், 2021-ல் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தது போல, இந்த முறையும் டெல்லியில் விவசாயிகள் நுழைந்துவிடக் கூடாது என எல்லை சாலைகளில் போலீஸாரை குவித்து வைத்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இருப்பினும், ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், டீசல் இருப்புடன் டிராக்டர்களில் டெல்லி நோக்கி முன்னேறிய வண்ணம் இருக்கின்றனர் விவசாயிகள்.
இதில், கடந்த இரண்டு நாள்களாக எல்லைகளில் குவிந்த விவசாயிகள் மீது போலீஸார் டிரோன் மூலமாக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுமட்டுமல்லாமல், டிராக்டர்கள் கடக்க முடியாத வகையில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு தடுப்புகள், சாலைகளில் இரும்பு ஆணிகள் பதித்தல், மணல், செங்கல் நிரப்பிய தடுப்புகள், பல அடுக்கு முள் கம்பி சுற்றிய தடுப்புகள், குதிரைகளில் சாலையைக் கடப்போர் விழும் வகையில் தரையில் லூப்ரிகன்ட்ஸ் (Lubricants) ஊற்றிவைத்து துப்பாக்கிகளுடன் போலீஸார் தயாராக இருக்கின்றனர்.விவசாயிகளைத் தடுக்கும் பணியில் போலீஸ்
முக்கியமாக, அதீத ஒலி எழுப்பக்கூடிய சோனிக் ஒலிபெருக்கிகளையும் போலீஸார் பொருத்திவைத்திருக்கின்றனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் செவித்திறனைப் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. சில இடங்களில் தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் டிரோன்களை காற்றாடி கொண்டும், கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர்கள் கொண்டும் விவசாயிகள் தகர்த்துவருகின்றனர். இத்தகைய செயல்பாடுகளால், `விவசாயிகளை இவ்வளவு கடுமையாகத் தீவிரவாதிகள் போல பா.ஜ.க அரசு எதிர்க்கிறது' என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றன.Farmers Protest
இத்தகைய சூழலில், பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, சன்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட விவசாய அமைப்புகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் போராட்டத்தை நிறுத்திவைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. சண்டிகரில் இன்று நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYFarmers Protest: விவசாயிகளை தடுக்கும் முன்னேற்பாடுகள்தான் இவை..! டெல்லி எல்லை காட்சிகள் | Album
http://dlvr.it/T2mtZy
Thursday 15 February 2024
Home »
» Farmers Protest: `சோனிக் ஒலிபெருக்கி டு தற்காலிக சிறைகள்'- விசாயிகளை தடுக்க போலீஸின் முன்னேற்பாடுகள்