சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை குஷ்பு, ``தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்களா? தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.குஷ்பு
அவர் தி.மு.க கட்சியிலிருந்தவர்தானே? இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டத்தைத் தாய்மார்களுக்குப் போடும் பிச்சை எனக் குறிப்பிட்டுப் பேசியது சமூக வலைதளங்களிலும், பொது மக்கள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில்,``1982-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை முரசொலி மாறன் 'பிச்சை' எனக் குறிப்பிட்டார். ஆனால், அதை யாரும் கண்டித்ததாக நான் பார்க்கவில்லை. ஓசியில்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்னபோதோ, உயர் நீதிமன்ற மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு சொன்னபோதோ நீங்கள் அனைவரும் பார்வையற்றவர்களாகவும், வாய்பேசமுடியாதவர்களாகவும், காது கேளாதவர்களாகவும் இருந்தீர்களா?குஷ்பு
போதைப்பொருள் நடமாட்டத்தை நிறுத்துங்கள், டாஸ்மாக்கிலிருந்து உங்கள் கமிஷனை குறைக்க வேண்டும் எனக் கூறுகிறேன். டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தைச் சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை விட மதுப்பிரியர்களால் அந்தப் பெண்கள் படும் வேதனை அதிகம். பெண்களைச் சுதந்திரமாக ஆக்குங்கள், அவர்களுக்கு உங்கள் ரூ.1000 தேவையில்லை. கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு அவர்களே சேமிப்பார்கள்.
ஆனால், உங்கள் அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தி.மு.க-வுக்குப் பணம் தேவை என்று நினைக்கிறேன். உங்கள் பொய்ப் பிரசாரத்தை தொடருங்கள், ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் தோல்வியடைந்ததை நிரூபிக்க அதுதான் ஒரே வழி " எனக் குறிப்பிட்டிருக்கிறார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY‘ஸ்டாலினுக்கே கூட்டம் சேராது; கமல்ஹாசன் முகம் திமுக-வுக்குத் தேவைப்படுகிறது!’ - குஷ்பு
http://dlvr.it/T3xlKF
Tuesday, 12 March 2024
Home »
» `முரசொலி மாறன் முதல் பொன்முடி வரை சொன்னார்களே..!’ - `பிச்சை’ சர்ச்சை பேச்சுக்கு குஷ்பு விளக்கம்