தெலங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்கள், துபாயில் வசிப்பவரால் அதிக சம்பளம் என்ற பெயரால் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஏமாற்றி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் ஈடுபட வைத்ததாக சமீபத்தில் ஒவைசி குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். அதையடுத்து, அங்கு சிக்கிக்கொண்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாக இந்திய வெளியுறவுத்துறை கூறிவந்தது.ஹைதராபாத் இளைஞர் முகமது அஸ்ஃபான்
இத்தகைய சூழலில், அவ்வாறு ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹைதராபாத் இளைஞர் முகமது அஸ்ஃபான் (30) என்பவர், ரஷ்யாவில் உயிரிழந்ததாக ரஷ்யாவிலிருக்கும் இந்திய தூதரகம், தனது அதிகாரபூர்வ X சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று பதிவிட்டது. ஆனால், முகமது அஸ்ஃபான் அங்கு எவ்வாறு உயிரிழந்தார் என்ற காரணத்தை இந்திய தூதரகம் கூறவில்லை.
இருப்பினும், உக்ரைனுக்கு எதிரான போரில் எல்லையில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தபோது முகமது அஸ்ஃபான் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, முகமது அஸ்ஃபான் ராணுவ உடையில் இருக்கும் படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்திலுள்ள மட்பூல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சையத் நவாஸ் அலி, இந்த செய்தியறிந்த பிறகு தன்னுடைய மகனும் ரஷ்யாவில் சிக்கியிருப்பதாகவும், அவரை உயிரோடு மீட்டுவர அரசிடம் மன்றாடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.போலீஸ்
இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் சையத் நவாஸ் அலி, ``என் மகன் சையத் இலியாஸ் ஹுசைனி (22), ஓரிரு ஆண்டுகள் துபாயில் வேலைபார்த்துவந்தார். பின்னர், மாஸ்கோவில் ரூ.70,000 சம்பளத்தில் வேலைவாங்கித் தருவதாக ஹுசைனியை ஏஜென்ட் ஒருவர் தொடர்புகொண்டார். இதுவே அவரை அங்கு செல்லத் தூண்டியது. டிசம்பரில் வீட்டுக்கு வந்த ஹுசைனி சில நாள்கள் இங்கிருந்தார். தற்போது, அவருடன் பேசியே ஐந்து நாள்கள் ஆகிறது. அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. என் மகன் உயிருடன் திரும்பி வருவதை நான் பார்க்க வேண்டும். இப்போது என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்புகொள்வது... அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. என் மகனைக் காப்பாற்ற அரசிடம் மன்றாடுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.காவல்துறை
மேலும், ``ஹுசைனியுடனான கடைசியாக தொலைபேசி அழைப்பில், தற்போது எல்லையில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் போர்க்களத்துக்குச் செல்லலாம் என்றும் அவர் கூறினார். அவர் பதட்டமாக இருப்பதாக எங்களுக்குத் தோன்றியது. ஆனால், அதை எங்களிடம் காட்டவில்லை" என்றும் சையத் நவாஸ் அலி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சையத் நவாஸ் அலி கடந்த மாதமே, கலபுர்கி துணை கமிஷனர் ஃபவுசியா, மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.ரஷ்ய ராணுவத்தில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர் உயிரிழப்பு... போரில் கொல்லப்பட்டாரா?!
http://dlvr.it/T3l5qD
Thursday, 7 March 2024
Home »
» ``ரஷ்யாவிலிருக்கும் என் மகனை உயிரோடு பார்க்க வேண்டும்!" - அரசிடம் மன்றாடும் கர்நாடக போலீஸ் அதிகாரி