2024 மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, கள பிரசாரம் மேற்கொள்வது எனத் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.அருண் கோயல்
மூன்று ஆணையர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் இருந்து வருகிறார். ஏற்கெனவே கடந்த மாதம் தேர்தல் ஆணையர் அனுப் பாண்டேவின் பதவிக்காலம் முடிந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டதால், மூன்றில் ஒரு பதவி காலியாக இருந்தது. இத்தகைய சூழலில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்திருக்கிறார். `இதன் விளைவாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஒரேயொரு தேர்தல் ஆணையருடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது' என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். `வென்று வாருங்கள்; மீண்டும் சந்திப்போம்..!’ - அமைச்சர்களிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்ன மோடி!
``அருண் கோயல், தனது ராஜினாமா முடிவைக் கைவிட வேண்டுமென உயரதிகாரிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் ராஜினாமா செய்துவிட்டார். அவரின் இந்த முடிவுக்கு நிச்சயம் உடல்நிலை காரணமாக இருக்காது என நம்புகிறோம். ஏனென்றால் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். தேர்தல் ஆணையரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்போது காலியாக இருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான வேலைகளை அரசு துரிதமாகத் தொடங்கும்" எனத் தனியார் ஊடகத்திடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
1985 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் கோயல், நவம்பர் 18, 2022 அன்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த நாளே, அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2027-ம் ஆண்டுதான் முடிவடைகிறது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜிவ் குமாரின் ஓய்வுக்குப் பிறகு, ஆணையத்தின் தலைமை பதவிக்கு அருண் கோயல் செல்லவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில்தான் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.மஹுவா மொய்த்ரா
தேர்தல் ஆணையரின் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா இந்த விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், ``தேர்தல் ஆணையர் அருண் கோயல், கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு ஏன் திடீரென ராஜினாமா செய்தார்...
தேர்தலைப் பல கட்டங்களாக நடத்துவது மற்றும் அதிகப்படியான படைகளை முன்னிறுத்துவது தொடர்பான டெல்லியின் கட்டளைக்கு, அருண் கோயல் உடன்படாமல் போயிருக்கலாம். தற்போது இவருக்குப் பதில் அந்த இடத்தில், `ஆம்' சொல்லக்கூடிய வேறொருவர் நியமிக்கப்படுவார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, ``தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மோடி அரசின் புதிய வழிமுறைப்படி, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இப்போது பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இருக்கின்றனர். அருண் கோயிலின் ராஜினாமாவால் தற்போது இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவியிடங்கள் காலியாக இருக்கின்றன. மோடி
அதனால், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரின் வாக்குகளுடன் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். 2024 லோக் சபா தேர்தலுக்கு முன்பு இது நடக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், தேர்தல் ஆணையரின் ராஜினாமா குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், `தேர்தல் ஆணையம் எப்படிச் செயல்படுகிறது என்பதில் கொஞ்சமும் வெளிப்படைத்தன்மை இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்.Tamil News Live Today: தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!
http://dlvr.it/T3sKjN
Sunday, 10 March 2024
Home »
» நெருங்கும் தேர்தல்; திடீர் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்... விவாதம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்!