சேலம், ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் நேற்று முன்தினம் தங்களது 2 வயது குழந்தையுடன் சூரமங்கலத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றனர். படம் பார்த்து முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, அப்போது குழந்தை கையில் கிடந்த 1.5 பவுன் தங்கக்காப்பு காணவில்லை. இதனால் பதற்றமடைந்து உடனே தியேட்டருக்கு சென்று தேடிப் பார்த்தனர். அங்கு தங்கக்காப்பு கிடைக்கவில்லை. உடனே தியேட்டருக்கு வெளியே வந்து தாங்கள் சென்ற இடங்களில் தங்க காப்பை தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தி குப்பையை வாகனத்தில் எடுத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தியேட்டர் பகுதியில் குப்பை சேகரிப்பில் ஈடுபட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் குமரேசனை குழந்தையின் பெற்றோர் தொடர்பு கொண்டு பேசினர்.
அவர் அங்கு குப்பை அள்ளி வந்த வாகனத்தை சாலையோரம் நிறுத்தி காணாமல் போன தங்கக்காப்பை தேடியுள்ளார்கள். அதில், தூய்மை பணியாளர் மணிவேல் கையில் தாங்க காப்பு கிடைத்தது. உடனே அதனை தேடிய குழந்தையின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து தூய்மை பணியாளர்களிடமிருந்து தங்கக்காப்பை பெற்றுக் கொண்டனர். குழந்தை தவறவிட்ட தங்க காப்பை தூய்மை பணியாளர்கள் குப்பையில் இருந்து மீட்டு ஒப்படைத்த தகவலை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை வெகுவாக பாராட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYசேலம்: செளடேஸ்வரி கல்லூரி முதல்வர்மீது பாலியல் புகார்; போலீஸ் விசாரணையும், முதல்வர் விளக்கமும்!
http://dlvr.it/T3vVxQ
Monday, 11 March 2024
Home »
» சேலம்: தவறிய குழந்தையின் தங்கக்காப்பு - குப்பையிலிருந்து மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்!