காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த பின்னர், முதன்முறையாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்துக்கு வந்த அவர், காரில் இருந்து இறங்காமல் அமர்ந்திருந்தார். அப்போது, மாவட்டத் தலைவர் தர்மராஜ் அருகில் சென்று இறங்கும்படி கூறினார். அதற்கு, `எமகண்டம் முடிய இன்னும் 2 நிமிடங்கள் இருக்கிறது, அதன் பின்னர் காரில் இருந்து இறங்குகிறேன்' எனக் கூறினார். விஜயதரணி காரிலிருந்து இறங்கும்வரை பா.ஜ.க தொண்டர்கள் காத்திருந்தனர். எமகண்டம் முடிந்த உடன் காரிலிருந்து இறங்கிய விஜயதரணியை, மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயதரணி, ``தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை வரவேற்கிறேன். ஆனால் மகளிர் உரிமைத்தொகையைப் பெறுபவர்கள், அதிகமாக தி.மு.க கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஜெயலலிதா கொண்டுவந்த திருமண நிதி, தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கான நிதியை ஏன் நிறுத்தினார்கள்... தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்குவதாகக் கூறியிருந்தது. ஆனால் குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் அது வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உரிமைத்தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை.இந்து முன்னணி முன்னாள் தலைவர் தாணுலிங்கநாடார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயதரணி
2024 தேர்தலில் மோடி தலைமையில்தான் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை எதிர்கட்சிக்காரர்களுக்கும் வந்துவிட்டது. நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மூன்று முறை விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறேன். என் குடும்பம் பாரம்பர்யமாக 80 ஆண்டுக்காலம் காங்கிரஸில்தான் இருந்து வருகிறோம். என் முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். 1999-ம் ஆண்டில் இருந்தே பாராளுமன்ற சீட் ஒதுக்கும்படி கேட்டு வருகிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் எனக்கு சீட் தராமல் புறக்கணித்தனர். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்தும் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். சட்டமன்றத்தில்கூட காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் இணைந்து கூட்டு சதிகள் செய்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் பெண்களுக்கு முன்னுரிமை தந்தார்கள். நன்றாகப் பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. தி.மு.க-வும், காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்து சட்டமன்றத்தில் முன் வரிசையில் இருந்த என்னை பின்வரிசைக்குத் தள்ளிவிட்டனர். பெண்கள் அதிகாரத்தின்மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரஸும், தி.மு.க-வும். கன்னியாகுமரி: தலைமை கொடுத்த `கிரீன்’ சிக்னல்?! - தேர்தல் அலுவலகம் திறந்த பொன்னார்
பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் தி.மு.க நடத்தி வருகிறது. இன்று பா.ஜ.க வளர்ச்சியைப் பார்த்தால் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண்களுக்கு மிக முக்கியத்துவம் தருகிறார்கள். பெண்களின் தலைமைப் பண்பை மறுக்கின்ற கட்சியாகத்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. பா.ஜ.க-வில் எனக்கு கண்டிப்பாக பதவி கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும். ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். இரண்டாவதாக பெண்கள் களப்பணி ஆற்றும் தளத்தை உருவாக்குவார்கள். அதுதான் பா.ஜ.க-வின் சீரிய தலைமை.விஜயதரணி
குடும்ப கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணி மட்டுமே பிரதான பணியாக நினைக்கக்கூடியது பா.ஜ.க மட்டும்தான். அதனால்தான் நான் பா.ஜ.க-வில் இணைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி-யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ-வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை. அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவராக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரஸில் இருக்க முடியும். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாரிசுக்குத்தான் சீட்டு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்திருக்கிறதா... எதுவும் செய்யவில்லை. மீண்டும் மோடிதான் ஆட்சிக்கு வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார்போல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும், தமிழகத்திலும் பா.ஜ.க மக்கள் பிரதிநிதிகள் வர வேண்டும்.நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயதரணி
தமிழ்நாட்டிலிருந்து 2014-ல் 39 எம்.பி-க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று பயன் ஒன்றும் இல்லை. நாடாளுமன்ற வாசலில் போராட்டம் நடத்திவிட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் நிறைய பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பா.ஜ.க-வை உயர்த்திப் பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்துச் சொல்வோம். நான் இனி எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY`தவறு செய்தது காங்கிரஸ் தலைமைதான்..!' - விஜயதரணி விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ
http://dlvr.it/T41S9n
Wednesday, 13 March 2024
Home »
» `சட்டமன்றத்தில் எனக்கெதிராக காங்கிரஸும், திமுக-வும் கூட்டுச்சதி செய்தன!' - விஜயதரணி சொல்வதென்ன?