அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும், அது அரசியலைமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றும் கூறிய உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரை விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தேர்தல் பத்திரங்களின் தகவல்களை எடுக்க ஜூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 12-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்களின் தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு வைத்தது. தேர்தல் பத்திரம் electoral bondsதேர்தல் பத்திர வழக்கு: சூடு கொடுத்த உச்ச நீதிமன்றம்... ஆடிப்போன SBI... சரியும் பங்கு!
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எடுப்பதில் வேலைகள் அதிகம், அதனால் ஜூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்த பாரத ஸ்டேட் வங்கி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டபடி மார்ச் 12-ம் தேதி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. இந்தத் தகவல்கள் மார்ச் 15-ம் தேதி தேர்தல் ஆணயத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ள விவரங்களில் என்ன இருக்கிறது என்பது குறித்த முதல்கட்ட விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 2019 ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மொத்தம் 22,217 என்றும், அதில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரியவந்திருக்கிறது.
மேலும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி பத்திரங்கள் விற்கப்பட்ட தேதி, அதன் மதிப்பு, பத்திரத்தை வாங்கியவர் யார் உள்ளிட்ட விவரங்களையும், இந்தப் பத்திரங்களை எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தேதிகளில் பணமாக்கியிருக்கின்றன என்ற விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்திய தேர்தல் ஆணையம் - SBI - Electoral Bond
இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்ட பிறகு அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்கள் நமக்குத் தெரியவரும்.
தேர்தல் பத்திரங்களில் பெரும்பகுதி நன்கொடையைப் பெற்றிருப்பது பாஜக என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம். ஆனால், இப்போது தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் அனைத்தும் வெளியாகும்போது யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவரும்போது அது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஆளும்கட்சிகளுக்குத்தான் நன்கொடைகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் பத்திர நடைமுறையைக் கொண்டுவந்ததும் பாஜகதான் என்பதால் வெளியாகும் விவரங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.மோடி | பாஜக `தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே CAA..!' - CPM கே.பாலகிருஷ்ணன் தாக்கு
தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வரலாற்றில் தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழலாக இருக்கப் போகிறது என்றும், இந்த விவரங்கள் வெளியாவதன் மூலம் நரேந்திர மோடி அரசின் உண்மையான முகமும், ஊழல் தொழிலதிபதிகளின் முகமும் வெட்டவெளிச்சமாகும் என்று கூறியிருந்தார்.
உண்மையில் வெளியாகப்போகும் தேர்தல் பத்திர விவரங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
http://dlvr.it/T43FxB
Thursday, 14 March 2024
Home »
» நீதிமன்றத்துக்குப் பணிந்த எஸ்.பி.ஐ; வெளிவரப்போகும் தேர்தல் பத்திர விவரங்களால் பாஜகவுக்கு பாதிப்பா?