பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``பிரதமர் மோடியின் கோவை வருகை மக்களாலும், பாஜக-வினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் ரோடு ஷோவினை பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பில்கூட காங்கிரஸ், திமுக விமர்சனம் செய்கின்றனர். வானதி சீனிவாசன்
பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால்தான், தமிழகத்துக்கு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின்மீது அவர்கள் பழிபோடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். பிரதமர் மோடியை 28 பைசா என அழைக்க வேண்டுமென உதயநிதி சொல்லியுள்ளார்.
தமிழகத்துக்கு யுபிஏ அரசாங்கத்தில் கொடுத்ததை விட அதிகமாக கொடுத்தவர் மோடி. பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிகமான சிறப்பு திட்டங்களை பிரதமர் தந்துள்ளார். பிரதமர் மோடியை தரக்குறைவாக 28 பைசா என அழைப்போம் என்றால், ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த உதயநிதியை ‘ட்ரக்’ உதயநிதி என அழைக்கலாமா? நாங்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல.உதயநிதி
ஆனால் பிரதமரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தருவோம். 3 ஆண்டு கால திமுக-வின் ஆட்சி மோசமான ஆட்சி. தாங்க முடியாத சுமையில் மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி தந்துள்ளார். இந்த தேர்தல் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல்.
இண்டியா கூட்டணி சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. 19 ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை இரண்டு மூன்று நாள்களில் நிறைவு பெறும். பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கி வருகிறோம். ஒரே கட்டமாக ஏன் தேர்தல் நடத்தவில்லை என்ற கமல்ஹாசனின் புரிதல் அரைகுறையானது. கமல்ஹாசன்
நடைமுறை எதார்த்தம் புரியாதவர் கமல்ஹாசன். மக்களை சந்திக்காமல் ராஜ்ய சபா சீட் வாங்கியுள்ளார். தேர்தல் பத்திரம் என்பது கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கவும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவு நிதியளிப்பதை தடுக்கவும் மோடி அறிமுகப்படுத்தினார். பாஜக-வை விமர்சனம் செய்பவர்கள் மாநில கட்சி வாங்கியதை ஏன் விமர்சனம் செய்யவில்லை.” என்றார்.‘‘பிரதமரின் டூர் பிளானை கேட்டுக்கொண்டு தேர்தல் தேதி அறிவித்திருக்கிறார்கள்’’ - கார்த்தி சிதம்பரம்
http://dlvr.it/T4C4mg
Sunday, 17 March 2024
Home »
» `` `Drug' உதயநிதி என அழைக்கலாமா?" - வானதி சீனிவாசன் காட்டம்