தேர்தல் சமயங்களில் வாக்களிக்கும் நபர்களுக்கு கை விரல்களில் விரைவில் அழியா மை (indelible ink) வைக்கப்படும். இதன் மூலம் கள்ள ஒட்டு போடுவது, ஏமாற்றுவது போன்ற தவறுகள் தவிர்க்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு அரசு தயாராகி வரும் நிலையில், அழியாத மை தயாரிக்கும் பணி 70% முடிந்துள்ளதாக மைசூரு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுருக்கமாக எம்பிவிஎல் என அறியப்படும் `மைசூரு பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனம் தேர்தலுக்கான மை தயாரிக்கும் ஆர்டர்களை வாங்கி உள்ளது. கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம், 1962-ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்துக்கான மையைத் தயாரித்து வருகிறது. `217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்...' ஆராய்ச்சியாளர்களைத் திணறடித்த நபர்..?!
தேர்தல் மை தயாரிப்பு குறித்து பேசியுள்ள நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கே முகமது இர்பான், ``தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணி 70% முடிந்துவிட்டது. மீதமுள்ளவை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
2024 பொதுத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்ற ஆர்டர்தான் இதுவரை கிடைத்த மிகப்பெரிய ஆர்டர். வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு மை நிரம்பிய குப்பிகளை டெலிவரி செய்துவிட்டோம். தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு மை தயாரித்து வருகிறோம். வரவிருக்கும் தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு 26 லட்சம் குப்பிகளில் அழியாத மை வழங்கி உள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.
அழியாத மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்…
*கள்ள ஒட்டு போடுவதைத் தவிர்க்க அழியாத மையை டெல்லியில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய இயற்பியல் ஆய்வகம் உருவாக்கியது. இதில் சில்வர் நைட்ரேட் உள்ளது. நகம் மற்றும் ஒளிக்கு வெளிப்படும்போது எதிர்வினையாற்றி கருமையாக மை மாறுகிறது.
*இந்த மையில் ஆல்கஹால் போன்ற ஒரு கரைப்பான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கையில் பட்டவுடன் விரைவிலேயே உலர்ந்து விடுகிறது. மை வைக்கப்படும் இடத்தில் ஊதா நிற அடையாளம் ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக மை கையில் இருக்கும்.
*10 மில்லி மை குப்பியில் இருந்து சுமார் 700 பேரின் விரல்களில் மை வைக்கலாம். கோவிட்`217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்...' ஆராய்ச்சியாளர்களைத் திணறடித்த நபர்..?!
*வாக்களித்ததற்கு ஆதாரமாக ஒருவரின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். அவருக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லையென்றால், இடது கையில் உள்ள மற்ற ஏதேனும் ஒரு விரலில் மை வைக்கப்படும். இடது கையில் அனைத்து விரல்களும் இல்லையென்றால் வலது கையின் ஆள்காட்டி விரலிலோ அல்லது வேறு ஏதேனும் விரலிலோ மை வைக்கப்படும்.
*ஒரு வேளை இரண்டு கைகளின் விரல்களும் இல்லாமல் இருந்தால் தோளின் இடது அல்லது வலது பக்கத்தில் மை வைக்கப்படும் என்று தேர்தல் விதிமுறைகள் கூறுகின்றன.
*தேர்தல் சமயத்தைத் தாண்டி, கோவிட் தொற்று சமயத்தில் இந்த மை பயன்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அடையாளம் காண சில மாநிலங்களில் மையை பயன்படுத்தினர்.
http://dlvr.it/T3l4TJ
Thursday, 7 March 2024
Home »
» Indelible ink: தேர்தல் மை தயாரிக்கும் பணி 70% முடிந்தது... சுவாரஸ்ய தகவல்கள்!