உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, ByteDance நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்து வந்தது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், நார்வே, ஆப்கானிஸ்தான் , பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.டிக்டாக் (TikTok)`டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பெரும் பிளவு!’ - டிக்டாக், வீ சாட் செயலிகளுக்குத் தடைவிதித்த ட்ரம்ப்
தொடர்ந்து, இந்த செயலி பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்து வந்தது. முன்னதாக, அமெரிக்காவில் மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீன அரசுக்கு டிக்டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமெரிக்கா முழுவதும் டிக்டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
2020-ல் டொனால்டு டிரம்ப் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசுத் துறையில் பணி செய்பவர்கள டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது, டிக்டாக் மீதான குற்றச்சாட்டிற்கு அதன் சிஇஒ சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், தற்போது 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிக்டாக் (TikTok) செயலிக்குத் தடை விதித்து மசோதா நிறைவேறியுள்ளது.
http://dlvr.it/T445NF
Thursday, 14 March 2024
Home »
» TikTok: டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை - காரணம் என்ன..?