மதுரை மாவட்டம் செக்காணூரணியில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்
விஜய பிரபாகரன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூருக்கு மக்கள் வெற்றியை கொடுத்தார்கள், ஆனால், அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை, மக்களுக்கான எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்தான் உள்ளது, மாணிக்கம் தாகூர் இதற்காக வலிமையாக போராடி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்திருக்கலாம்.
அதே போல பஸ்போர்ட் திட்டம், ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிள்ளது. கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், செய்யவில்லை. இந்த டோல்கேட்டினால் எவ்வளவு சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆர்.பி.உதயகுமார்
தொகுதி வளர்ச்சிக்காக துளியளவு கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அக்கறையும் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் செல்கிற இடமெல்லாம் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி முதன்மையான பங்கு வகிக்கும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக - காங்கிரஸ் தானே. அவர்கள் கொண்டு வரவில்லையென்றால் இவ்வளவு பிரச்னை இல்லையே, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.?விஜயபிரபாகரன்-ஆர்.பி.உதயகுமார்
பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல திமுக-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கானல் நீரை போன்றது, கண்ணால் பார்க்க மட்டுமே முடியும், பயன்படுத்த முடியாது, அதுபோலத்தான் இவர்களின் தேர்தல் அறிக்கை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5BDG5
Sunday, 7 April 2024
Home »
» "விஜயபிரபாகரன் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" - ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை