நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் திராவிட இயக்கப் பேச்சாளா் நாஞ்சில் சம்பத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதில் பேசிய அவர், "தூத்துக்குடியில் பெய்த மழை காலங்களில் கனிமொழி மட்டும் இந்த தொகுதிக்கு எம்.பியாக கிடைக்கவில்லை என்றால் மிகப் பெரிய பாதிப்பையும் இழப்பையும் நாம் சந்தித்திருப்போம். நாஞ்சில் சம்பத் பரப்புரை
ஏனென்றால் அப்படிப்பட்ட காலகட்டத்தில் இருசக்கர வாகனம், ஜே.சி.பி, போன்ற வாகனங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றி ஜனநாயக கடமையைச் செய்தார். ஏற்கனவே இங்குஅவர் செய்த பணிகள் ஏராளம். மீண்டும் ஓரு வாய்ப்பை வழங்கி அவர் வெற்றி பெற்றால் சென்னைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி பெரிய தொழில்நகரமாக எல்லா வகையிலும் வளர்ச்சியடையும். 10 ஆண்டுகாலம் எந்த திட்டங்களையுமே செயல்படுத்தாத பா.ஜ.கவுக்கு முடிவுரை எழுதும் தேர்தல்.
பல்வேறு கட்சிகள் சிதறிக்கிடந்ததை ஓருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்,அமைச்சர் என பலரையும் தன்னுடைய அதிகாரத்தில் இருக்கின்ற சிபிஐ வருமான வரித்துறை தேர்தல் ஆணையம் இதன்மூலம் பழிவாங்கியுள்ளது பா.ஜ.க அரசு. மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வருமேயானால் இந்தியா முழுவதும் சிறைச்சாலையாக மாறிவிடும். தமிழகத்தில் 20 ஆயிரம் ரெளடிகள் இருப்பதாக பட்டியல் தெரிவிக்கின்றன. நாஞ்சில் சம்பத் தேர்தல் பரப்புரை
அதில் 10 ஆயிரம் பேர் பா.ஜ.க கட்சியில் உள்ளனர். ஆன்மிகத்தில் அரசியலை கலந்து அதில் பிரிவினையை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க. அதைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்குகளைப் பெறலாம் என்ற பா.ஜ.கவின் திட்டத்திற்கு நாம் இடமளிக்கக் கூடாது. நாம் எல்லோருக்கும் ஓரு மருந்தாக ஆன்மிகம் தேவைதான். ஆனால் அதில் அரசியலை கலப்பதுதான் தவறு. மன்மோகன்சிங் பிரதமாராக இருந்தபோது 107 முறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார்.
மோடி ஓரு முறைகூட சந்தித்தது கிடையாது. ஆனால் 204 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளர். அ.தி.மு.க, பா.ஜ.க கள்ளக்கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு எதிரான எல்லா சட்டங்களையும் ஆதரித்துவிட்டு இப்போது தேர்தலுக்காக தொடா்பு இல்லை என்று நாடகமாடுகிறார். முதலமைச்சராக இருக்கிற ஸ்டாலின் 23 வயதில் அவர் மிசாவை சந்தித்தவர். 50 ஆண்டுகாலம் பொதுவாழ்வில் உள்ளவர் அவர்கென்று ஓரு வரலாறு உண்டு. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கூவத்துாில் காலை பிடித்து பதவிக்கு வந்த வரலாறுதான் உண்டு. தேர்தல் பரப்புரை
கடைசியில் சசிகலாவை கட்சியை விட்டே நீக்கி விட்டார்கள் . இதிலிருந்தே நாட்டு மக்கள் உங்கள் துரோகத்தை தொிந்து கொள்வார்கள். இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருந்த குஜராத்தை பின்னுக்கு தள்ளி முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் முன்னேறியுள்ளது. கனிமொழிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு வெற்றியின் மூலம் இந்தியாவை தீர்மானிக்கும் இடத்தில் தமிழகம் இருக்கும்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5BDT5
Sunday, 7 April 2024
Home »
» ``தமிழ்நாட்டில் 20,000 ரெளடிகள்; அதில் 10,000 பேர் பாஜக-வில் உள்ளனர்” - நாஞ்சில் சம்பத்