மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. ஆளும் பா.ஜ.க வில் 4 தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. ரத்னகிரி, நாசிக், கல்யாண் மற்றும் தானே தொகுதியை பா.ஜ.க வும், சிவசேனா(ஷிண்டே)வும் கேட்டுக்கொண்டிருந்தன. மேலும் பா.ஜ.க சொல்லும் நபரைத்தான் வேட்பாளராக அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பா.ஜ.க உள்ளூர் தலைவர்கள் உதவியுடன் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது. அதில் தற்போது இருக்கும் எம்.பி.க்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக அக்கருத்துக்கணிப்பு இருந்தது. அதன் அடிப்படையில்தான் வேட்பாளர்களை பா.ஜ.க நியமித்து வருகிறது. தனது கட்சி மட்டுமல்லாது சிவசேனா(ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சிகளின் வேட்பாளர்களையும் பா.ஜ.க வே முடிவு செய்து கொண்டிருக்கிறதாம்.
பா.ஜ.க சொன்னபடி 3 தொகுதிக்கு வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சிவசேனாவின் வசம் இருக்கும் நாசிக் தொகுதியை அஜித் பவார் கட்சியிடம் கொடுக்க பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹின்கோலி தொகுதிக்கு முதல்வர் ஷிண்டே வேட்பாளரை அறிவித்த பிறகு அவரை மாற்றும்படி பா.ஜ.க கேட்டுக்கொண்டது. வேறு வழியில்லாமல் ஷிண்டே மாற்றி இருக்கிறார். முதல்வர் ஷிண்டேயின் சிவசேனாவில் தற்போது 13 எம்.பி.க்கள் இருக்கின்றனர். பா.ஜ.க வின் தலையீடு காரணமாக அவர்களில் 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
இப்போதே இப்படி என்றால் அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க எப்படி நடந்து கொள்ளுமோ என்று முதல்வர் ஷிண்டே கவலையடைய ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். கல்யான் தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். அப்படி இருந்தும் அந்த தொகுதியை முதல்வர் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேயிக்கு கொடுக்க பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் கல்யான் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. எப்படியும் தனது மகனுக்கு சீட் வேண்டும் என்பதில் முதல்வர் ஷிண்டே உறுதியாக இருந்தார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் அத்தொகுதியை சிவசேனாவிற்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்துள்ளது. நேற்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கல்யான் தொகுதியில் ஸ்ரீகாந்த் ஷிண்டே போட்டியிடுவார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது பா.ஜ.க தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆனால் ஸ்ரீகாந்த் ஷிண்டேயை நிறுத்த பா.ஜ.கவில் எந்த வித எதிர்ப்பும் இல்லை என்று பட்னாவிஸ் அறிவித்து இருக்கிறார்.ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ்
மாமனாரை எதிர்த்து மருமகள் போட்டி:
மகாராஷ்டிரவில் உள்ள வார்தா தொகுதியில் பா.ஜ.க சார்பாக ராம்தாஸ் என்பவர் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். அவரை எதிர்த்து அவரது மருமகள் பூஜா சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். குடும்ப பிரச்னையில் ராம்தாஸ் மகனிடமிருந்து அவரது மருமகள் பூஜா பிரிந்து வாழ்கிறார். பூஜாவின் வேட்பு மனுவிற்கு அவரது மாமானார் ராம்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் வேட்பு மனு ஏற்கபட்டுபட்டுவிட்டது. பூஜா தனது 17 வயது மகனுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பூஜா,''எனது மகனுக்கு நீதிவேண்டும். எனது கணவர் வீட்டில் மாமனார் மற்றும் மாமியாரால் கடுமையாக சித்ரவதைக்கு ஆளானேன். என்னைப்போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒவ்வொரு பெண்ணின் உரிமைக்காக போராடுகிறேன்''என்றார். இது போன்ற நிகழ்வுகளால் மகாராஷ்டிரா அரசியலில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5BCtc
Sunday, 7 April 2024
Home »
» கூட்டணி வேட்பாளர்களையும் பாஜக-வே முடிவு செய்கிறதா?! - மகனுக்கு போராடி சீட் வாங்கிய ஷிண்டே!