காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவதற்காக திருநெல்வேலி வந்திறங்கினார். அங்கு உரையாற்றியவர் பின்னர் அங்கிருந்து கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``டியர் ராகுல் பிரதர்... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக! இந்தத் தேர்தலின் ஹீரோ காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். பிரதமர் மோடி எப்பொதும் வெளிநாட்டு டூரில் இருப்பார்.நெல்லையில் ராகுல்
இப்பொது உள்நாட்டில் டூரில் இருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தேர்தலில் நின்று மக்கள் வாக்களித்தால்தான் வரமுடியும். அவர் எங்களை மட்டும் அவமானப்படுத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின்
எங்களுடன் வாக்காளர்களையும் அவமானப்படுத்துகிறார். ஊழலைப் பற்றி மோடி பேசலாமா... ஊழல் யுனிவர்சிட்டிக்கு மோடிதான் வேந்தர். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அவர்களின் கூட்டணியை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரத்துக்கு வசூல் செய்தனர்.
இனியும் நீங்கள் ஊழலைப் பற்றி பேசினால், 'யோக்கியன் வரான்... சொம்பு எடுத்து உள்ள வை' என்றுதான் சொல்ல வேண்டும். யார் பிரதமர் வேட்பாளர்... யாரை எதிர்த்துப் பேச வேண்டும், எதற்காக நிற்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிறது அ.தி.மு.க. பா.ஜ.க-வை எதிர்த்துப் பேச முடியாமல், கள்ளக் கூட்டணிக்கு ஆதரவு தேடி வருகின்றனர். ஒரு வரியில் சொன்னால் 'Simply Waste'." என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ``நாட்டில் மிகப்பெரிய சித்தாந்த போர் நடந்து வருகிறது. இது மோடி அரசு அல்ல. அதானி அரசு. அதானி விரும்பும் எல்லாவற்றையும் மோடி உடனடியாக கொடுக்கிறார். அதானி எப்படி எல்லாம் சலுகை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியவுடன் என் மக்களவை உறுப்பினர் பொறுப்பு, நான் குடியிருந்த வீடு எல்லாவற்றையும் எடுத்துவிட்டனர். நெல்லையில் ராகுல்
அதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு வீடு தேவையில்லை. லட்சக்கணக்கான வீடுகள், முக்கியமாக தமிழ்நாடு மக்கள் வீடுகள் எனக்காக திறந்தே இருக்கும். எனக்கும் உங்களுக்கும் அரசியல் தொடர்பு இல்லை. இது குடும்ப உறவு. பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் ஆகிய தலைவர்கள் அறிவாற்றலால் மக்களின் உணர்விலும், உயிரிலும் கலந்தவர்கள். எதற்காக எங்கள் மொழி, அடையாளம், பாரம்பர்யத்தை அழிக்கிறீர்கள். இங்கு வந்து தோசை பிடிக்கும் என்கிறீர்கள். வட இந்தியா சென்று ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்லி இந்த மக்களின் பாரம்பர்யத்தை அவமானப்படுத்துகிறீர்கள். ஏன் தமிழ், கன்னட, வங்காள மொழிக்கு பேசுவதில்லை. உங்களுக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது பிரச்னை இல்லை. நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் என்ன செய்ய போகிறீர்கள். ஸ்டாலின் என் மூத்த சகோதரர். நான் வேறு யாரையும் சகோதரர் என்று அழைப்பதில்லை." என்றார்.`சித்தாந்தப் போர் இது... மோடி அல்ல உலகின் எந்த சக்தியும் உங்களைத் தொட முடியாது!' - நெல்லையில் ராகுல்
http://dlvr.it/T5RSjc
Saturday, 13 April 2024
Home »
» `ஸ்டாலினைத் தவிர யாரையும் சகோதரர் என அழைப்பதில்லை...' - கோவை கூட்டத்தில் ராகுல் நெகிழ்ச்சி