பாஜக கூட்டணியில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு வாக்கு கேட்டு அவர் மனைவி அனுராதா தொடர்ந்து தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.அனுராதா தினகரன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் வடுகப்பட்டி, சிந்துபட்டி, செம்பட்டி, தும்மக்குண்டு பகுதிகளில் பரப்புரை செய்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எல்லா இடங்களிலும் டிடிவி தினகரனுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது, மக்கள் அவரை மறக்கவே இல்லை. நீங்கள் வந்தால் போதும், நீங்கள்தான் வெற்றிபெற வேண்டும் என சொல்கின்றனர்.
குக்கர் சின்னம் நல்லபடியாக ரீச் ஆகி வருகிறது. ஏற்கனவே 10 ஆண்டுகள் இப்பகுதியில் இருந்ததால், அவரை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். நாங்களும் குக்கர் சின்னம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
டிடிவி தினகரனையும், தங்க தமிழ்ச்செல்வனையும் குரு- சிஷ்யன் என யார் சொன்னது? அந்த மாதிரி ஒன்றும் இல்லை. மக்களிடமும் அந்த மாதிரி எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வன்
வரலாற்றிலேயே அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக அது நடக்கும் என நம்பிக்கை உள்ளது, மக்கள் அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5YVqS
Tuesday, 16 April 2024
Home »
» "தினகரனையும், தங்க தமிழ்ச்செல்வனையும் குரு - சிஷ்யன் என யார் சென்னது?" - அனுராதா தினகரன்