இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். இவர், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவது உண்டு. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,''`சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்றிருக்க அவர் கூறிய தகவலால் `கங்கனாவின் IQ 110-ஐ தாண்டிவிட்டது... அதனால்தான் அவருக்கு பா.ஜ.க வாய்ப்பு வழங்கியிருக்கிறது’ என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.கங்கனா ரனாவத்
ஆனால், கங்கனா ரனாவத் தன் கருத்தை மிகவும் ஆழமாக நம்பினார். அதனால், அதை உறுதிப்படுத்தும் விதமாக,``நேதாஜி தன்னை இந்தியாவின் பிரதமர் என்று1943-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி அறிவித்துக்கொண்டார்’ எனக் கூறி சில ஸ்கிரீன் ஷார்ட்களைப் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், சுபாஷ் சந்திர போஸின் மருமகன் சந்திர குமார் போஸ் தன் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, கங்கனா ரனாவத் ஆகியோரை டேக் செய்து,``யாரும் தங்கள் அரசியல் ஆசைக்காக வரலாற்றை சிதைக்கக் கூடாது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு அரசியல் சிந்தனையாளர், ராணுவ வீரர், அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையுடையவர், பிரிவினைக்கு முன்பான இந்தியாவின் முதல் பிரதமர். இந்திய சுதந்திரத்திற்காக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து பாரதிய ஜனதாக்களாகப் போராடக்கூடிய ஒரே தலைவர். அவருக்கு உண்மையான மரியாதை அவருடைய சித்தாந்தத்தை பின்பற்றுவதுதான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். சந்திர குமார் போஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில், ``எனது கொள்கைகள் கட்சியுடன் ஒத்துப்போகவில்லை" எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார் என்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY``ராகுலும் பிரியங்காவும் அரசியலில் தொடர சோனியாவால் சித்ரவதை செய்யப்படுகிறார்கள்" - கங்கனா
http://dlvr.it/T5BTXd
Sunday, 7 April 2024
Home »
» கங்கனா ரனாவத் சர்ச்சை: ``அரசியல் லாபத்துக்காக வரலாற்றை திரிக்கக்கூடாது" - நேதாஜி குடும்பம்!