காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துகொண்டால், பெண் அதற்குப் பொறுப்பாக முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. முன்னதாக, 2023-ல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவர் காதலித்து வந்த பெண் மற்றும் பெண்ணின் தோழி தற்கொலைக்குத் தூண்டியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞனின் தந்தை புகாரளித்திருந்தார். மேலும், இதில் தன்னுடைய மகனின் தற்கொலை குறிப்பில் அந்த இருவரின் பெயரும் இருந்ததாக இளைஞனின் தந்தை புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு பெண்களும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.காதல் முறிவு
அப்போது இதனை விசாரித்த நீதிபதி அமித் மகாஜன், ``பலவீனமான மனநிலை கொண்ட ஒரு நபர் எடுத்த தவறான முடிவுக்கு மற்றொரு நபரைக் குறை கூற முடியாது. காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்துகொண்டாலோ, தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டாலோ, நீதிமன்றத்தில் தன்னுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மனுதாரர் தற்கொலை செய்துகொண்டாலோ, காதலியோ, தேர்வு நடத்துபவரோ, வழக்கறிஞரோ அந்தத் தற்கொலைக்குப் பொறுப்பாக முடியாது. அதுபோல, இந்த வழக்கைப் பொறுத்தவரையில் இறந்தவரின் தற்கொலை குறிப்பில், சாதாரண நபரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதைக் காட்ட எதுவும் இல்லை.டெல்லி உயர் நீதிமன்றம்
மேலும், இந்தத் தற்கொலை குறிப்பு இறந்தவரின் வேதனையின் நிலையை மட்டுமே வெளிப்படுத்தியது. அதன் காரணமாக, அந்தக் குறிப்பில் இடம்பெற்றிருந்த இரு பெண்களுக்கு அந்த இளைஞனைத் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் நோக்கமும் இருந்தது என்று ஊகிக்க முடியாது. மேலும், இருவரின் வாட்ஸ்அப் மெசேஜ்களைப் பார்க்கையில், இறந்த இளைஞர் சென்சிட்டிவான நபர் என்றும், பெண் தன்னுடன் பேச மறுக்கும் போதெல்லாம் தற்கொலை செய்துகொள்வேன் என்று அந்தப் பெண்ணை தொடர்ந்து அவர் மிரட்டியிருக்கிறார்'' என்று கூறி, அந்த இரு பெண்களுக்கும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார். மேலும், ஜாமீன் நிபந்தனைகளை அவர்கள் மீறினால், ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அரசுக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.மாஞ்சோலை: தமிழர் - மலையாளி காதல்; பதிவுத் திருமணம்; தற்கொலைகள் - எஸ்டேட்டின் காதல் கதைகள்!
http://dlvr.it/T5dkXk
Wednesday, 17 April 2024
Home »
» `காதல் தோல்வியில் ஆண் தற்கொலை செய்துகொண்டால், காதலி பொறுப்பாக முடியாது!' - டெல்லி உயர் நீதிமன்றம்