பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக 3 ஆக உடைந்துவிட்டது என ஸ்டாலின் சொல்கிறார். அவர் நம் கட்சியை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தார்.எடப்பாடி பழனிசாமி
அவை அத்தனையும் தவிடு பொடியாக்கப்பட்டது. பாஜகவுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். பேட்டி கொடுப்பது மட்டுமே அவர் வேலை. விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தலைவர்கள் பல வழியில் மக்களை சந்திப்பார்கள். இவர் பேட்டி கொடுத்தே மக்களை நம்பவைத்து வாக்கு பெற முயற்சி செய்கிறார். அது தமிழ்நாட்டில் எடுபடாது. இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். இங்கு அதிமுகதான் உழைக்கிற கட்சி. நீங்கள் எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் அது எடுபடாது.அண்ணாமலை
நாங்கள் நினைத்தாலும் பேட்டி கொடுக்கலாம். அதனால் என்ன பயன். எப்போது எதை சொல்ல வேண்டுமோ, அப்போது சொன்னால்தான் மக்களிடம் சென்றடையும். இவரைப் போல எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
காவரி நதிநீர் பிரச்னை தீர்வுக்கு பிரதமரும், அண்ணாமலையும் வாய் திறந்தார்களா. மத்தியில் இருந்து அடிக்கடி வந்து சென்று கொண்டுள்ளார்கள். நேராக ஏரோ பிளேனில் இறங்குகிறார்கள். சாலையில் அப்படியே சென்று என்ன பயன். மக்கள் ஓட்டு போடுவார்களா. தமிழக மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். ஏமாற்று வேலைகள் எல்லாம் இங்கு நடக்காது.அதிமுக பொள்ளாச்சி பொதுக்கூட்டம்
திமுக-வில் 4 முதல்வர்கள் உள்ளனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என இப்படி 4 அதிகார மையங்கள் உள்ளன. உள்ளூரில் ஒனான் பிடிக்க முடியாதவன் காட்டில் சென்று சிங்கம் மேய்ப்பானாம். அப்படித்தான் இருக்கிறது இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்னும் விளம்பரம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5Lv9S
Thursday, 11 April 2024
Home »
» ``இங்கு உழைப்பவர்களுக்கு தான் மரியாதை..!" - அண்ணாமலையை சாடிய எடப்பாடி பழனிசாமி