தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். மக்கள் அளிக்கும் ஓட்டு, சாதாரண ஓட்டு கிடையாது. சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். முத்தரசன்
சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி பேசினால் தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என மோடி நினைக்கிறார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திய தலைவா்கள் குறித்து பேச பிரதமா் மோடிக்கோ அல்லது பா.ஜ.கவினருக்கோ தகுதி இல்லை. 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகிவிடலாம் என மோடி நினைப்பது பகல் கனவு. 100 கேள்விகள் என்ற பெயரில் பா.ஜ.க நாளிதழ்களில் விளம்பரம் செய்து உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்றார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். கறுப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்றார். 15 பைசாகூட வரவு வைக்கப்படவில்லை. மோடியின் உத்தரவாதம் எனக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது பா.ஜ.க. விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை மோடி கொண்டு வந்தார். 3 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சியினர் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை. தேர்தல் பரப்புரை
அந்தச் சட்டத்தில் ஒரு புள்ளிகூட திருத்த முடியாது என்றார் மோடி. இதையடுத்து 16 மாதங்கள் தொடர்ந்து விவசாயிகள் போராடினார்கள். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். உயிர் பலிக்குப் பிறகே சட்டத்தை திரும்பப் பெற்றார். தற்போது ’கச்சத்தீவு’ என்று கதை கட்டி பிரச்னையை திசை திரும்புகிறார். கச்சத்தீவினை மீட்க மோடி எந்த கடிதமும் எழுதவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது. 10 ஆண்டு காலம் கச்சத்தீவினைப் பற்றி வாய்திறக்காத மோடி, தற்போது மட்டும் பேசுவது ஏனோ?
தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ரூ.7,000 கோடியை மோடி ஊழல் செய்துள்ளார். தேர்தல் கமிஷன் நியாயமாக செயல்படவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்த முறையில் இருந்து தெரிகிறது. அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்கிறது. வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் பணத்தை பிக் பாக்கெட் போல எடுத்துக் கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்படி நிதி வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கட்சிக்கு 11 கோடி ரூபாய் அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. மோடி ஹிட்லர் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரை முடியும். அப்படிப்பட்ட சுவரை மோடி இடித்து கொண்டு இருக்கிறார். திரண்ட மக்கள்
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்பதை உருவாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. நாட்டை காப்பாற்ற யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். இது தேர்தல் திருவிழா இல்லை நாட்டை மீட்டெடுப்பதற்கான யுத்தம். லாபத்தில் இயங்கி வந்த 23 பொது துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுதான் மோடியின் சாதனை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் தென்னகத்தில் புல்லட் யில் விடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே துறையில் இருந்த பல்வேறு சலுகைகளை மோடி அரசு பறித்து விட்டது.” என்றார்.ஓ.பி.எஸ் முன்னிலையில் தாக்கப்பட்டாரா பாஜக மாவட்டத் தலைவர்? - ராமநாதபுரம் பிரசாரத்தில் பரபரப்பு!
http://dlvr.it/T5cWMx
Wednesday, 17 April 2024
Home »
» ”எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்பதை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது” - முத்தரசன் குற்றச்சாட்டு!