உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரபலமான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள். இந்த நிலையில், வாரணாசி காவல்துறை ஆணையர் "No touch rule" என்ற ஆணையைப் பிறப்பித்திருக்கிறார். அதில், "காவல்துறை உடைக்குப் பதிலாக காவி உடை அணிந்த காவலர்கள், கோயில் பகுதியில் வளம் வருவார்கள். பக்தர்களுக்கு மத்தியில் ஏற்படும் சர்ச்சைகள், தரிசனத்துக்கான ஏற்பாடுகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.காவி உடையில் காவல்துறை
அவர்கள் இது போன்ற சமயங்களில் பக்தர்களைத் தொடாமல் அவர்களை சீர்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். இதற்காக 3 நாள்கள் பயிற்சியளிக்கப்டுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஒரு தரப்பு மட்டும் ஆதரவு தெரிவிப்பதால், தொடர்ந்து சர்ச்சை நிலவிவருகிறது.
இது தொடர்பாக விளக்கமளித்த வாரணாசி போலீஸ் கமிஷனர் மோஹித் அகர்வால், "கூட்டத்தை நிர்வகித்தல், பக்தர்களின் நல்வாழ்வு, வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவலர்களின் பாரம்பரிய காவி உடை யாத்ரீகர்களுடன் மிகவும் நேர்மறையான தொடர்புகளை வளர்க்கிறது. இதனால், அமைதியின்மை அபாயம் குறைக்கிறது. கோயிலில் உள்ள பாதுகாப்பு பணி மற்ற இடங்களிலிருக்கும் பாதுகாப்பு பணிகள் போன்றதல்ல. அது வேறுபட்டது.அகிலேஷ் யாதவ்
ஏனெனில் இங்கு வெவ்வேறு வகையான மக்கள் கூட்டத்தை காவல்துறை நிர்வகிக்க வேண்டும். காவல்துறையால் தள்ளப்படும் பக்தர் எரிச்சலடைகிறார். அதே காரியத்தை அர்ச்சகர்கள் செய்தால் அவர்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் தொடுதல் கொள்கையைப் பின்பற்றாமல், பூசாரிகள் உடையில் போலீஸார் பணியமர்த்தப்படுகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல்துறை அதிகாரிகள் தங்கள் சீருடைகளைத் தவிர வேறு எதையும் அணிய அனுமதிக்கும் முடிவு, பெரிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறைக்கு அர்ச்சகர் வேஷம் போடுவது எந்த 'போலீஸ் கையேடு' படி சரி? இப்படி உத்தரவு போடுபவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டாமா? நாளை இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்பாவி பொதுமக்களை யாரேனும் கொள்ளையடித்தால், தவறாக வழிநடத்தினால் என்ன செய்வது? உ.பி. அரசும் நிர்வாகமும் பதில் சொல்லுமா? ஆணையரின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Vietnam: 12.5 பில்லியன் டாலர் மோசடி வழக்கு; பெண் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை! - கோர்ட் அதிரடி
http://dlvr.it/T5QP7K
Friday, 12 April 2024
Home »
» உ.பி: சீருடையில் மாற்றம்; சாமியார்களாக மாறிய போலீஸார்... காவல்துறை முடிவும் எழுந்த விமர்சனமும்!