தேர்தல் நேரம் என்றாலே தலைவர்கள் 'அங்கே செல்வது... இங்கே செல்வது' என தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என பறந்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆம்... பஸ், ரயிலில் பயணத்தில் குறைந்த நேரத்தில் பல இடங்களுக்கு செல்ல முடியாது... பிரசாரம் செய்ய முடியாது என்று, அவர்களது சாய்ஸ் பெரும்பாலும் விமானமாகத் தான் இருக்கும். விமானத்திலும் தனியார் விமானங்களுக்கு தான் அவர்களின் முதல் மற்றும் பிராதான டிக் விழும்.பல இடங்களுக்கு செல்ல முடியாது... பிரசாரம் செய்ய முடியாது...மொத்த வாக்காளர்கள் 94 கோடி...
வாக்களிக்காதவர்கள் 30 கோடி...
3-ல் 1 மடங்கு தவிர்க்கக் காரணம்?
பொதுவாகவே கொஞ்சம் கட்டணம் அதிகமாக இருக்கும் இந்த தனியார் விமானங்களின் பயணக் கட்டணம் தேர்தல் நேரங்களில் இன்னும் கூடும்.
விமானப் போக்குவரத்து துறை தகவலின்படி, இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வரை மொத்தமாக 112 தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வைத்திருக்கும் மற்றும் இயக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் வைத்திருக்கும் விமானங்களில் சுமார் 3 முதல் 37 பேர் வரை பயணிக்க முடியுமாம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலால் விமானங்களின் டிமாண்ட் அதிகரித்துள்ளதால், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சிறிய ரக விமானங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு எடுத்துள்ளன.
பொதுவாக விமானங்களின் ஒரு மணி நேர வாடகைக் கட்டணம் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.25 வரை வேறுப்படும். ஒற்றை இன்ஜின் விமானத்தின் வாடகைக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை ஆகும். இரட்டை இன்ஜின் விமானத்தின் வாடகைக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.70 லட்சம் வரை ஆகும்.7 பேர்...12 பேர்ஓராண்டுக்குள் பணியில் இருந்து விலகும் 30% பெண்கள்... டெக் துறையில் என்ன நடக்கிறது..?
இந்தக் கட்டணங்கள், தேர்தல் நேரங்களில் உயர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒற்றை இன்ஜின் விமானங்களுக்கு ரூ.1.5 லட்சமும், இரட்டை இன்ஜின் விமானங்களுக்கு ரூ.3.5 லட்சமும் வசூலிக்கப்படும்.
ஒற்றை இன்ஜின் விமானங்களில் 7 பேரும், இரட்டை இன்ஜின் விமானங்களில் 12 பேரும் பயணம் செய்யலாம்.
தேர்தல் காலத்தில் அதிகரிக்கப்படும் இந்த தொகையால் விமான நிறுவனங்களுக்கு கிட்டதட்ட 15 முதல் 20 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும் என வணிக விமான இயக்குனர்கள் சங்கம் கூறுகிறது.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த தகவலின் படி, 2019-20-ல் ஹெலிகாப்டர் மற்றும் தனியார் விமானங்களின் பயன்பாட்டுக்காக ம் பா.ஜ.க ரூ.250 கோடியும், காங்கிரஸ் ரூ.126 கோடியும் செலவு செய்துள்ளன.
http://dlvr.it/T5XgwB
Monday, 15 April 2024
Home »
» Election: விமானம், ஹெலிகாப்டருக்கு அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் எவ்வளவு தெரியுமா..?