மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு நடக்கும் மக்களவைத் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயத்தில் உத்தவ் தாக்கரே இருக்கிறார். இதற்காக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். துலே என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, "எதிர்க்கட்சி வேட்பாளர் கடந்த தேர்தலில் என்னுடன் இருந்தார். கடந்த 10 ஆண்டில் என்ன செய்தார் என்பதை ஒவ்வொரு தொகுதி மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இரண்டு முறை வெற்றி பெற்றவுடன் துலே தொகுதியை தனது தனிப்பட்ட சொத்தாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
கடந்த முறை உங்களுக்கு (மோடி) மகாராஷ்டிரா 40 தொகுதிகளை கொடுத்து உங்களை டெல்லிக்கு அனுப்பியது. ஆனால் இந்த முறை நீங்கள் டெல்லி செல்ல மகாராஷ்டிரா உங்களுக்கு உதவாது. ஜூன் 4ம் தேதி மக்கள் பாஜகவிற்கு குப்பை தொட்டியை காட்டுவார்கள். ஜூன் 5ம் தேதி எங்கள் அரசு பதவியேற்கும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடிய ரேவண்ணாவிற்காக மோடி ஓட்டுக்கேட்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை பிடிப்போம். உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் இருந்து மோடி அரசு எடுத்துச்சென்ற சொத்துக்களை மீண்டும் மகாராஷ்டிராவிற்கு கொண்டு வருவோம்'' என்று தெரிவித்தார்.
நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்த மகாராஷ்டிராவின் மாதா தொகுதிக்கு உட்பட்ட பாகல்வாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த விவசாயி தங்களது பகுதியில் எந்தவித கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி கோபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தீவைத்து எரித்துவிட்டார். உடனே தேர்தல் அதிகாரிகள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதே போன்று ஒஸ்மனாபாத் தொகுதியில் சிவசேனா தொண்டர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6b9qQ
Wednesday, 8 May 2024
Home »
» ``ஜூன் 4ம் தேதி பாஜக குப்பையில் தூக்கி வீசப்படும்" - உத்தவ் தாக்கரே காட்டம்