ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்தாண்டு வெளியானபோது, விமானத்தில் பிரதமர் மோடியுடன் அதானி பயணிக்கும் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டி, `உங்களுக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு?' என்று ராகுல் காந்தி கேட்டபோதுகூட அதில் கருத்து தெரிவிக்காத பிரதமர் மோடி, முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் அம்பானி, அதானி பெயரை உச்சரித்திருக்கிறார்.ராகுல் காந்தி
அதுவும் இத்தனை ஆண்டுகளாக அதானியையும், மோடியையும் பா.ஜ.க-வின் 10 ஆண்டுக்கால ஆட்சியுடன் ஒன்றாக இணைத்து குற்றம்சாட்டிவந்த காங்கிரஸுக்கு எதிராக அதானி, அம்பானி பெயரை முன்வைத்துக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தெலங்கானாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அம்பானி, அதானி பெயர்களுடன் ராகுல் காந்தியை தொடர்புபடுத்திக் கேள்வியெழுப்பிய மோடி, ``தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி, அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி, அதானியிடமிருந்து எவ்வளவு தொகையைப் பெற்றுக்கொண்டு, அமைதியாக இருக்கிறார்... அம்பானி, அதானியைப் பற்றிப் பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்களே... உங்களுக்குள் என்ன ஒப்பந்தம்... உங்களுக்குள் ஏதோ இருக்கிறது" என்று பேசியிருந்தார்.மோடி
இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே, ``காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் இன்று தனது சொந்த நண்பர்களையே தாக்க ஆரம்பித்துவிட்டார். மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதையே இது பிரதிபலிக்கிறது. முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்" என்று தெரிவித்தார்.ராகுல் காந்தி
இந்த நிலையில், மோடியின் கேள்விகளுக்குத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மூலம் பதிலளித்திருக்கும் ராகுல், ``மோடி ஜி பயந்துவிட்டீர்களா... அதானியும், அம்பானியும் உங்களுக்கு டெம்போவில் பணம் நிரப்பி தருகிறார்களா... இது உங்களின் சொந்த அனுபவமா... பா.ஜ.க-வின் ஊழல் டெம்போவின் 'ஓட்டுநர்' மற்றும் 'உதவியாளர்' யார் என்பது நாட்டுக்கே தெரியும். ஒன்று செய்யுங்கள், அவர்களுக்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறையை அனுப்பி விசாரணை மேற்கொள்ளுங்கள், அச்சப்பட வேண்டாம்" என்று சவால் விடுத்திருக்கிறார்.10 ஆண்டுகளில் முதன்முறையாக அதானி, அம்பானிக்கு எதிராக மோடியின் கமென்ட்... பின்னணி என்ன?!
http://dlvr.it/T6c0cN
Wednesday 8 May 2024
Home »
» Ambani, Adani: `மோடி ஜி அச்சப்பட வேண்டாம்; அவர்களுக்கு CBI, ED-யை அனுப்புங்கள்!' - ராகுல் சவால்