கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் (JD-S) கட்சியின் வேட்பாளருமான ஹாசன் தொகுதி சிட்டிங் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 பாலியல் வீடியோக்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த விவகாரத்தை கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்துவர, நாளும் பல பெண்கள் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகப் புகாரளித்துவருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமல்லாது அவரின் தந்தையும் முன்னாள் மாநில அமைச்சருமான ரேவண்ணா மீதும் பாலியல் வன்கொடுமை புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.ரேவண்ணா (இடது ஓரம்) - பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்)
இதில், பாலியல் புகாரளித்த பெண் கடத்தப்பட்ட வழக்கில் ரேவண்ணா கடந்தவாரம் கைதுசெய்யப்பட்டார். அதோடு, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியோடியிருப்பதால் அவரை கைதுசெய்து மீட்டுவர மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னொருபக்கம், பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக பா.ஜ.க நிர்வாகியொருவர் ஓராண்டு முன்பே கட்சித் தலைமையிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாக, இது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்னை என பா.ஜ.க ஒதுங்கியது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தன்னுடைய பிரச்னை இல்லையென்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து பேசிய மோடி, ``வெளியான ஆயிரக்கணக்கான வீடியோக்கள், ஜே.டி.எஸ்-காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவம் என்பதை உணர்த்துகிறது. காங்கிரஸ் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் இந்த வீடியோக்களை சேகரித்து, தேர்தல் சமயத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு வெளியிட்டிருக்கின்றனர். அதுவும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.பிரதமர் மோடி
மாநில அரசுக்கு இதுபற்றி தகவல் தெரிந்திருந்தால் விமான நிலையத்தில் கண்காணிப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையுமே செய்யவில்லை. மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் விளையாட்டு. இந்த வீடியோக்கள் அவர்களின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற சமயத்தில் எடுக்கப்பட்டவை என்று அவர்களுக்கே தெரியும். இது என்னுடைய பிரச்னை இல்லை.
ஆனால், எந்தக் குற்றவாளியும் தப்பக்கூடாது. அதுதான் இப்போது என்னுடைய பிரச்னை. இதுபோன்ற விளையாட்டுகள் நாட்டில் நிறுத்தப்பட வேண்டும். பா.ஜ.க மற்றும் அரசியல் சாசனத்தை பொறுத்தவரை, இத்தகைய நபர்களுக்கு எதிராகத் துளியும் சகிப்புத் தன்மை இருக்கக் கூடாது. அதுவே என்னுடைய கருத்தும். அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார்.மோடி
கர்நாடகாவில் 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஜே.டி.எஸ் கட்சியுடன் கூட்டணியாட்சி அமைத்த காங்கிரஸ் முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்து. பின்னர், 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக்கொண்டதால், மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படவே பா.ஜ.க ஆட்சியமைத்தது. அதன்பின்னர், மீதமிருந்த ஆட்சிக்காலத்தை பா.ஜ.க முழுமையாக நிறைவுசெய்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு - தோண்டத் தோண்ட வெளிவரும் 10 ஆண்டு அதிர்ச்சிகள்!
http://dlvr.it/T6XW1C
Tuesday, 7 May 2024
Home »
» பிரஜ்வல் ரேவண்ணா: `இத்தகைய நபர்களுக்கு எதிராக துளியும் சகிப்புத்தன்மை கூடாது!' - மெளனம் கலைத்த மோடி