கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அதுவும் காங்கிரஸ் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலியில் சோனியா காந்தி பெற்ற வெற்றி அது. அதேசமயம், காங்கிரஸ் குடும்பத்தின் மற்றொரு கோட்டையான அமேதியில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில், மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி 15 இடங்களில் வெற்றிபெற, பா.ஜ.க தனியாக 62 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
இப்படியிருக்க, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில், அந்தத் தொகுதியில் 40 ஆண்டுகளாக கட்சிப்பணி செய்துவரும் காங்கிரஸ் நிர்வாகி கிஷோரி லால் சர்மா என்பவரையும் காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள்முதல் ரேபரேலி, அமேதி என இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். இப்படியிருக்க, காங்கிரஸ் குடும்பம் தேர்தலின்போது மட்டுமே அமேதி மற்றும் ரேபரேலிக்கு வருவதாக பா.ஜ.க விமர்சித்துவருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் விமர்சனங்களுக்கு நேற்று எதிர்வினையாற்றுகையில் அமித் ஷாவையும் சேர்த்து சாடிய பிரியங்கா காந்தி, ``பா.ஜ.க கூறுவதில் துளிகூட உண்மை இல்லை. யார் எப்போது எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதில் பெயர்போனவர் அமித் ஷா, குறிப்பாக பெண்களை. சில நாள்களுக்கு முன்பு நான் என் மகளைப் பார்க்க தாய்லாந்து சென்றிருந்ததைத் தேர்தல் கூட்டமொன்றில் அமித் ஷா கூறியிருந்தார்.பிரியங்கா காந்தி
ஆமாம், நான் தாய்லாந்து சென்றிருந்தேன். ஆனால், இதை எப்படி தான் அறிந்துகொண்டார் என்பதை அமித் ஷா கூறுவாரா... அனைத்து தகவல்களையும் வைத்திருக்கும்போது எதற்காக அவர் இவ்வாறு பொய் சொல்ல வேண்டும்" என்று கேள்வியெழுப்பினார்.அமித் ஷா
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புகூட, ரேபரேலிக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்று அமித் ஷா விமர்சித்ததற்கு, ``காங்கிரஸ் தான் இங்கு ரயில் பெட்டி தொழிற்சாலை, National Institute of Fashion Technology, ரிங் ரோடு, ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை கொண்டு வந்தது. நாங்கள் இங்கு எய்ம்ஸ் கொண்டுவந்தோம், நீங்கள் (பாஜக) அதை மூடினீர்களே தவிர வேறென்ன செய்தீர்கள்" என்று பிரியங்கா காந்தி சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbRaebareli: முதல் பெண் பிரதமரை அளித்த ரேபரேலியில் `ராகுல் காந்தி'... வரலாறும், கள நிலவரமும்!
http://dlvr.it/T6vsxF
Wednesday, 15 May 2024
Home »
» ``நான் தாய்லாந்து சென்றதை அமித் ஷா அறிந்து கொண்டது எப்படி என சொல்வாரா?!” - காட்டமான பிரியங்கா காந்தி