நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,``நான் இந்து - முஸ்லிம் என்று பிரிக்கவில்லை. உங்களால் எவ்வளவு குழந்தைகளை வளர்க்க முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறியுள்ளேன்.மோடி
ஆனால், அக்குழந்தைகளை அரசு ஆதரித்து வளர்க்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டாம் என்கிறேன். நான் ஒரு கிராமத்துக்கு வீடுகளைக் கொடுத்தால், 100 சதவிகிதம் அனைத்து பயனாளிகளுக்கும் கொடுக்கிறேன். அவர்கள் எந்த சமூகம், எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. இதுதான் சமூக நீதி, உண்மையான மதச்சார்பின்மை. மேலும் இதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை.
முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பார்களா, அவர்களின் வாக்குகள் தேவையா என்றெல்லாம் கேட்கிறீர்கள், என் நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நான் இந்து - முஸ்லிம் எனப் பிரித்து பார்க்கும்போது, பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன். மேலும் நான் இந்து-முஸ்லிம் எனப் பிரிவினை செய்ய மாட்டேன். அதுதான் என் உறுதியான முடிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88வேட்புமனுத் தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடிய பிரதமர் மோடி; கங்கை குறித்த அபூர்வ புராணத் தகவல்கள்!
http://dlvr.it/T6vTh9
Wednesday, 15 May 2024
Home »
» ``இந்து - முஸ்லிம் எனப் பிரித்து பார்த்தால், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகிடுவேன்" - மோடி