டெல்லி மதுபான கொள்கை வழக்கில், கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி கண்ணா,``2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? எனவே ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்" என தெரிவித்து ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.அரவிந்த் கெஜ்ரிவால்
திகார் சிறையிலிருந்து வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் சிறைக்கு வெளியே திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால்,``நான் விரைவில் வருவேன் என்று உங்களிடம் கூறினேன் அல்லவா... நான் திரும்பி வந்துவிட்டேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு நான் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுகிறேன்.
இப்போது நம்மில் 140 கோடி பேர் அதை செய்ய வேண்டும். இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி. நாளை காலை 11 மணிக்கு, நாம் அனைவரும் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திருக்குச் செல்வோம். பின்னர் மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு இருக்கும். உங்கள் அனைவரையும் ஹனுமான் மந்திருக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Arvind Kejriwal: `3 புத்தகங்கள்!' கெஜ்ரிவால் சிறையில் படிப்பதற்காக அனுமதி கேட்டது இதற்காகத்தான்!
http://dlvr.it/T6j5mD
Friday, 10 May 2024
Home »
» ``நான் திரும்பி வந்துட்டேன்; சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடுகிறேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்