டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையின்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் கிளம்பியது. அப்போது, `தேர்தலைக் காரணம் காட்டி பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது சட்டத்தின்படி நடக்கும் சாதாரண மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்' என அமலாக்கத்துறை எதிர்த்தது.உச்ச நீதிமன்றம் - அமலாக்கத்துறை - கெஜ்ரிவால்
இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றம், ஜூன் 1-ம் தேதிவரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதோடு, `2022 ஆகஸ்ட்டில் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக அவரை கைதுசெய்யாமல் தேர்தல் நேரத்தில் கைதுசெய்தது ஏன்?' என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியும் எழுப்பியது.
அதைத்தொடர்ந்து வெளியே வந்து பிரசாரங்களில் ஈடுபட்ட கெஜ்ரிவால், `சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுகிறேன். பா.ஜ.க மீண்டும் ஆட்சியமையத்தால் அமித் ஷா பிரதமராக்கப்படுவார். ஆம் ஆத்மியை நீங்கள் வெற்றிபெறவைத்தால் நான் மீண்டும் சிறையிலடைக்கப்படாமலிருப்பேன்' என்று கூறிவந்தார்.அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை கெஜ்ரிவால் அவமதித்திருப்பதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது வழக்கமான தீர்ப்பு இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.அமித் ஷா
தனியார் ஊடகத்துடனான நிகழ்ச்சியில், வெற்றிபெறவைத்தால் மீண்டும் சிறையிலடைக்கப்படாமலிருப்பேன் என்று கெஜ்ரிவால் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, ``இது உச்ச நீதிமன்றத்தின் மீதான அப்பட்டமான அவமதிப்பு. ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்பாது என்று இதன்மூலம் அவர் கூற முயல்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், தங்களின் தீர்ப்பு எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். மேலும், இதில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட தீர்ப்பு வழக்கமான தீர்ப்பு அல்ல என்று நான் நம்புகிறேன். நாட்டில் பலரும் இவருக்கு மட்டும் ஸ்பெஷல் தீர்ப்பு என்றே நினைக்கின்றனர்" என்று கூறினார்.`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' - கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம்
http://dlvr.it/T6wlZt
Wednesday, 15 May 2024
Home »
» `கெஜ்ரிவால் பேசியது உச்ச நீதிமன்றத்தின்மீதான அப்பட்டமான அவமதிப்பு!' - அமித் ஷா