மதுரை மாநகர அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பட்டாசு வெடித்து 70 கிலோ கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி கட்சியினர் கொண்டாடினார்கள்.செல்லூர் ராஜூ
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "திமுக-வின் மூன்றாண்டு சாதனையை திமுக தலைவர்கள்தான் கொண்டாடுகின்றனர், திமுக-வினர் கொண்டாடவில்லை, மக்களும் கொண்டாடவில்லை. திமுக-வின் மூன்றாண்டு காலம் மக்களுக்கு கேடு காலம்தான்.
தமிழகத்தில் காவல்துறை உதவியோடுதான் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்கப்படுகிறது. பஞ்சுமிட்டாய், ஜவ்வு மிட்டாய் போல போதை மிட்டாய்கள் வந்துவிட்டதாக பொதுவெளியில் கூறுகிறார்கள். விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை, திமுக ஆட்சிக்கு வந்தாலே எல்லா துறைகளையும் கைப்பற்றுவார்கள். அந்தவகையில் சினிமாத்துறையையும் கைப்பற்றி உள்ளனர். திமுக ஆட்சியை எதிர்த்து பேசினால் அடக்குமுறைகளால் அடக்க பார்க்கின்றனர். பிரபல ஏவிஎம் நிறுவனமே தங்கள் புரொடக்க்ஷனை நிறுத்துவதாக தெரிவித்தனர். விளையாட்டுத்துறை அமைச்சரின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் திரையரங்குகளை அதிகளவில் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் நினைத்தால்தான் படம் ரீலிஸ் ஆகும்.
சிவாஜி படத்தின் ரைட்ஸ் கொடுக்காததால் அன்றைக்கு ரஜினியும் பாதிக்கப்பட்டார்." என்றார்.
"எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளாரே.." என்ற கேள்விக்கு,
"தமிழகத்தில் இது நல்ல பண்பு, யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி. அனைவரும் வாழ்த்து சொல்லும் அளவிற்கு தகுதி படைத்தவர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.செல்லூர் ராஜூ
"தேர்தல் ஆணையம் பாஜக-விற்கு ஆதரவாக செயல்படுகிறது என அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகிறதே..." என்ற கேள்விக்கு
"விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்."
"நடிகர் விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததுள்ளாரே.." என்ற கேள்விக்கு,
"நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரைப்போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துவது அவருக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை" என்றவர், தொடர்ந்து பேசும்போது, "அதிமுக-வில் பிளவு என்பதே இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம், ஒன்றிரண்டு பேர் செல்வார்கள். ஆலமரத்தில் வெயில் காலத்தில் இலைகள் உதிரும், பின்பு துளிர்க்கும்.நடிகர் விஜய்
அதுபோல சில இலைகள் உதிர்ந்துள்ளது, பல இலைகள் புதிதாக துளிர்க்கும், அதனால் சிலர் போவார்கள், நிறையப்பேர் வருவார்கள். அதிமுக வேப்பமரம் போல பட்டு போய்விடும் என நினைத்தார்கள். ஆனால், வீரத்தால், விவேகத்தால், செயல்பட்டு கட்சியை நிமிர்த்திக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக அழிவதுபோல தெரியும், ஆனால் பீனிக்ஸ் பறவைபோல வீறுகொண்டு எழும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbஅரூர்: `உங்களுக்கெல்லாம் முடிவெட்ட முடியாது’ - சலூன் கடையிலும் சாதிய தீண்டாமையா? - போலீஸ் விசாரணை!
http://dlvr.it/T6mg1G
Sunday, 12 May 2024
Home »
» `நடிகர் விஜய், எம்.ஜி.ஆர் போல; சம்பாதித்ததை மக்களுக்குச் செலவு செய்ய நினைக்கிறார்!' - செல்லூர் ராஜூ