சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருபவர் சண்முகநாதன். இவர் நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சி தலைமை வழங்கிய பணத்தை அவரே எடுத்துக் கொண்டதாக கடந்த 9ம் தேதி ஆத்தூர் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நரசிங்கபுரம் நகர பாஜக செயலாளராக இருந்த அனிதா உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் நகர செயலாளர் அனிதா ஆத்தூர் டவுன் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், `கடந்த மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாமக அலுவலகத்தில் இருந்தேன். அப்போது பாஜக நகர தலைவர் சுதாகர் என்னை மிரட்டியதுடன், தகாத முறையில் நடந்து கொண்டார். மாவட்ட தலைவரின் மெத்தன போக்காலும், அவருக்கு வலதுக்கரமாக இருப்பதாலும், சுதாகர் நரசிங்கபுரம் நகருக்குள் இருக்கும் ஒரு சில மகளிரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும், அவர்களை அசிங்கமாக திட்டியும் வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். ஒட்டப்பட்ட போஸ்டர்!
இதேப்போல் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக கலை கலாச்சார பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, ஆத்தூர் நகர போலீஸில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். புகாரில், ``மாவட்ட தலைவரின் தூண்டுதலின் பேரில் நிர்வாகி சுதாகர் உள்ளிட்ட சிலர் எனது செல்போனுக்கு அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு பதிவுகளை போட்டு வருகின்றனர். என்னையும், எனது கணவரை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். இப்புகார் மனுக்கள் மீது ஆத்தூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆத்தூர் காவல் நிலையம்
இந்த நிலையில் நரசிங்கபுரம் பாஜக நகர தலைவர் சுதாகர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், ``பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் குறித்து அவதூராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கேசவன், குமார், வேல்முருகன், அனிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட ஏழு பேர் கூட்டாக சேர்ந்து ஒட்டி உள்ளனர் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இப்படி அடுத்தடுத்து பாஜகவினரிடையே ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து உள்ள நிலையில், அனைத்து புகார்கள் மீதும் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88சேலம்: `குழந்தை திருமணத்தில் 180 கரும்புள்ளி கிராமங்கள்’ - மாவட்ட ஆட்சியர் சொல்வதென்ன?!
http://dlvr.it/T6b9Xz
Wednesday, 8 May 2024
Home »
» `தகாத முறையில் நடந்து கொண்டார்’ - சேலம் பாஜக நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகிகள் பகீர் புகார்