இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவரும் சூழலில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதித் திட்டத்தில் இந்தியாவின் RAW ஏஜென்சி ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சமீபத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்வினையாற்றிய ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova), ``இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகள்மீது அமெரிக்கா இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்துவதை நாங்கள் காண்கிறோம்.மரியா ஜாகரோவா - ரஷ்யா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
இது இந்தியாவுக்கு அவமரியாதை. மேலும், இது இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சிக்கலாக்கும் வகையில் இந்தியாவின் உள் அரசியல் சூழ்நிலையைச் சீர்குலைக்கும் அமெரிக்காவின் முயற்சி. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர்கள் தலையிடுவதன் ஒரு பகுதி இது" என்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதோடு, காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சி குறித்து பேசுகையில், ``குற்றப்பத்திரிகையில் உண்மையாக இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் அவை நிரூபிக்கப்படும் வரை அவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து நான் எதுவும் பேசமுடியாது" என்று தெரிவித்தார்.அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்
இந்த நிலையில், ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் தலையிடவில்லை என அமெரிக்க தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller), ``நிச்சயமாக இல்லை... மற்ற நாடுகளின் தேர்தல்களில் நாங்கள் தலையிடாததைப்போலவே, இந்தியாவின் தேர்தலிலும் தலையிடவில்லை. இது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு" என்று கூறினார்.`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’
http://dlvr.it/T6hJFt
Friday, 10 May 2024
Home »
» `இந்திய பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடுகிறோமா?' - ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில்!