ஸ்கிராட்ச் கார்டு (scartch card) என்றால் என்ன?
ஸ்கிராட்ச் கார்டு என்பது ஒன்றும் புதிய விசயமல்ல. இது 1990-களிலேயே மக்களுக்கு அறிமுகமானதுதான். சிறு குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுப் பொருள்களுடன் தொங்கவிடப்பட்டுள்ள அட்டையில் பல்வேறு சிறு ஸ்கிராட்ச் கார்டுகள் இணைக்கப்பட்டிருக்கும். அந்த ஸ்கிராட்ச் கார்டை சுரண்டி, அதில் உள்ள எண்ணைத் தெரிவித்தால், கடைக்காரர் அந்த எண்ணுக்குள்ள பரிசுப் பொருளை குழந்தைகளுக்கு வழங்குவார்.
இது நாளடைவில், லாட்டரிச் சீட்டில் பரிணாம வளர்ச்சியடைந்து, லாட்டரிச் சீட்டைச் சுரண்டி அதில் உள்ள எண்ணுக்கு பரிசு விழுந்தால், பணம் பெற்றுக் கொள்ளலாம் என இருந்தது. ஆனால் பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை முழுவதுமாக லாட்டரியிலேயே இழந்து விட்டு வருவதால் குடும்பங்கள் வறுமையில் தவித்தன. இதனால் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் லாட்டரிச் சீட்டுகளுக்குத் தடை விதித்தன. லாட்டரி
இந்நிலையில், G-Pay உள்ளிட்ட பல ஆன்லைன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவர இந்த ஸ்கிராட்ச் கார்டு முறையை அறிமுகம் செய்தன.
இந்த முறையைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் அனைத்து இணைய வர்த்தகத் தளங்களும், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற பணப் பரிசு அல்லது பொருள்களை பரிசாக வழங்க ஸ்கிராட்ச் கார்டு முறையைப் பயன்படுத்தத் தொடங்கின. தற்போது ஸ்கிராட்ச் கார்டு முறையைப் பயன்படுத்தாத இ-காமர்ஸ் தளமே இல்லையெனச் சொல்லலாம்.
ஸ்கிராட்ச் கார்டு பண மோசடி:
தற்போது, பல்வேறு ஆன்லைன் வர்த்தகச் செயலிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இந்த ஸ்கிராட்ச் கார்டுகளைப் போலவே, மோசடிப் பேர்வழிகள் ஸ்கிராட்ச் கார்டுகளை உருவாக்கி, பொதுமக்களுக்கு பரிசு விழுந்திருப்பதாகத் தெரிவித்து, அவர்களை நம்ப வைத்து, புது முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ. 15 லட்சம் பெற ரூ. 18 லட்சத்தை இழந்த பெண்:
பெங்களூரு, அன்னப்பூரணிஸ்வரி நகரைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி, பிரபல ஆன்லைன் தளத்தின் பெயரில் ஒரு ஸ்கிராட்ச் கார்டு வந்துள்ளது. இவர் அதனை தேய்த்து பார்த்தபோது, அவருக்கு ரூ. 15.51 லட்சம் பரிசு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பெண், அதில் தெரிவிக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.மோசடி
அப்போது மறுமுனையில் பேசிய நபர், அந்த ஸ்கிராட்ச் கார்டின் புகைப்படம், அப்பெண்ணின் தனிநபர் ஆதாரங்கள் போன்ற பல்வேறு ஆவணங்களை கேட்டுப் பெற்றுள்ளார். தொடர்ந்து, தற்போது கர்நாடகத்தில் லாட்டரிச் சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொகையை உடனே வழங்குவதில் சிக்கல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே முதலில் 4% செயலாக்கக் கட்டணத்தை மட்டும் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணும் பணத்தை கட்டியுள்ளார். தொடர்ந்து, அரசுக்குச் செலுத்த வேண்டிய 30 சதவீத வரியை உடனடியாக கட்டுமாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என கடந்த 3 மாதங்களில் மட்டும், இவ்வாறு அந்த மோசடிக் கும்பல் கேட்கும்போதெல்லாம் பல்வேறு தவணைகளில் ரூ. 18,40,168 லட்சம் வரை அப்பெண், அம்மோசடிக் கும்பலுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தியுள்ளார். மோசடி
இந்நிலையில் திடீரென எதிர்முனையில் செல்போன் ஆப் செய்யப்பட்டு விட, பதறிப் போன பெண், போலீஸாரைத் தொடர்பு கொள்ள, அப்போதுதான் அப்பெண் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66சி, 66டி, இந்திய தண்டனைச் சட்டம் 419, 420 ஆக வழக்குப் பதிவு செய்த போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் இதுபோன்று வரும் ஸ்கிராட்ச் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, அது அதிகாரப்பூர்வமான நிறுவனத்தில் இருந்துதான் வழங்கப்பட்டுள்ளதா எனப் பரிசோதித்து பயன்படுத்துமாறும் போலீஸார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6rmzd
Tuesday, 14 May 2024
Home »
» Scratch Card Scam: ரூ.15 லட்சத்துக்காக ரூ.18 லட்சத்தை இழந்த பெண் - மக்களே உஷார்..!