நாடாளுமன்றத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஆந்திரா உட்பட 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இதே நாளில் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது.ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவைப் பொறுத்தவரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என இரண்டிலும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி-பாஜக-ஜனசேனா கட்சி மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தல்களின்போது பா.ஜ.க, காங்கிரஸ் என இரண்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்தாலும், நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ, டெல்லி சேவை மசோதா போன்றவற்றை எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோது பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தது.
ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன் மத்திய அரசு அமல்படுத்திய சி.ஏ.ஏ விதிகளை மறுப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அறிவித்தது. அதன்தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் பா.ஜ.க, காங்கிரஸ் என இரண்டையும் விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை ஒருபோதும் கூட்டணி கட்சியாக நினைத்ததில்லை எனவும், நாடாளுமன்றத்தில் சில சமயங்களில் தங்களுக்கு ஆதரவளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.மோடி
தெலுங்கு ஊடக சேனலுடனான உரையாடலில் இதனைத் தெரிவித்த மோடி, ``ஆந்திராவில் தற்போதிருக்கும் அரசே மீண்டும் வரும் என்பதை என்பதை நான் நம்பவில்லை. மாநிலத்தின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் இருக்கிறது. அதோடு, ஜெகன்மோகன் ரெட்டியை ஒரு சாத்தியமான கூட்டணி தலைவராக ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் சில முக்கியமான பிரச்னைகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி-க்கள் எங்களுக்கு ஆதரவளித்திருக்கின்றனர். முன்பும் நாங்கள் தேர்தலில் எதிராளிகளாகவே இருந்தோம். ஒருபோதும் கூட்டணி கட்சிகளாகத் தேர்தல்களுக்குச் செல்லவில்லை. எப்போதும் அரசியலில் எதிரெதிர் முனைகளில்தான் இருந்தோம். யார் ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களையும் வலிமையாக்க வேண்டும் என்பதே எனது அடிப்படை. மற்ற மாநிலங்களுக்கு நான் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறேனோ அதே அளவு ஆந்திராவின் வளர்ச்சிக்கும் நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbAndhra: `4% முஸ்லிம் இட ஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்!' - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதி
http://dlvr.it/T6krDN
Saturday, 11 May 2024
Home »
» `YSR காங்கிரஸை கூட்டணிக் கட்சியாக நினைத்ததில்லை; ஆனால் நாடாளுமன்றத்தில்..!' - மோடி கூறுவதென்ன?