2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துகொண்ட பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலைவிட பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதமும் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. பல முக்கிய அமைச்சர்கள் தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள்.பிரதமர் மோடி, மோகன் பகவத்
ராமர் கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியில்கூட பா.ஜ.க தோற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் 40-க்கும் குறைவான இடங்களில்தான் வென்றது. இந்த நிலையில், நாக்பூரில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத், ``தேர்தல் கொண்டாட்டங்களிலிருந்து வெளிவந்து, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரியாகப் பார்க்கக்கூடாது.
அவர்களின் கருத்தும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். உலகம் முழுவதும் சமூகம் மாறிவிட்டது. அதன் விளைவாக முறையான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றம்தான் ஜனநாயகத்தின் சாராம்சம்." என மறைமுகமாக பா.ஜ.க-வை விமர்சித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற 'ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார், ``ராம ராஜ்ஜியத்தில் இருக்கும் ஜனநாயகத்தை பாருங்கள். ராமர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் ஆணவம் பிடித்தவர்களாக மாறினார்கள்.இந்திரேஷ் குமார்
அதனால் ராமர் அவர்களை 241 இடங்களை கொடுத்து அவர்களின் ஆணவத்தை நிறுத்தியிருக்கிறார். அதே நேரம் அவர்களின் நம்பிக்கைக்காக அவர்களை பெரிய கட்சியாக உருவாக்கியிருக்கிறார். ராமரை நம்ப மறுத்தவர்களுக்கும் 234 இடங்களை கொடுத்தும் தோற்கடித்திருக்கிறார். ராமருக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆட்சியை கொடுக்கவில்லை. ராமரின் ஆட்சி நீதியானது. ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். ராமரை எதிர்ப்பவர்களை எதிர்த்து ராமரே சமாளித்துக்கொள்வார். ராமர் மக்களையும் காப்பாற்றி, ராவணனுக்கும் உதவியவர் என்பதை மறக்க கூடாது" எனப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88கழுகார் பதில்கள்: மோடியின் ராமர் கோயில் அரசியல் எடுபடவில்லைதானே?
http://dlvr.it/T8GFH3
Friday, 14 June 2024
Home »
» ``ஆணவம் கொண்டவர்களை ராமர் 241 தொகுதிகளோடு தடுத்துவிட்டார்" - மீண்டும் பாஜகவை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்