நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று முந்தினம் கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மதுபான பார்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சியான காங்கிரஸ் சட்டசபையில் விவாதத்தை கிளப்பியிருந்தது. நேற்று இரண்டாவது நாள் சட்டசபை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் சி.பி.எம் கூட்டணி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "தேர்தல் தோல்விக்காக ராஜினாமா செய்யவேண்டும் எனக்கூறிக்கொண்டு யாரும் வரவேண்டாம். 1980-ல் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அடுத்துவந்த சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றிபெற்றது. காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன், முதல்வர் பினராயி விஜயன்
2019 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் கூட்டணி வென்றது. அது உங்களுக்கு நினைவிருக்கலாம். என்ன அடிப்படையில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறுகிறீர்கள். காங்கிரஸ் முதல்வர் ஏ.கே.ஆண்டனி 2004-ல் ராஜினாமா செய்தது தேர்தலில் சீட் குறைந்ததால் அல்ல. காங்கிரஸில் அமைப்பு ரீதியாக ஏற்பட்ட பிரச்னைதான் காரணம் என உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். சி.பி.எம் கூட்டணிக்கு எதிராக மக்கள் செயல்பட்டதாக நினைக்க வேண்டாம். மோடியை மாற்ற வேண்டும் என கேரள மக்கள் நினைத்தனர். அதற்காக காங்கிரஸ் கூட்டணியை மாற்றாக மக்கள் நினைத்தனர். இடது ஜனநாயக முன்னணி-க்கு எதிரனது என நீங்கள் கருதக்கூடாது. நான் கூறியதில் உண்மை உள்ளதா என்பதைமட்டும் ஆராய்ந்து பாருங்கள்.
நீங்கள் (காங்கிரஸ்) வாக்கு வாங்கியதிலோ, நீங்கள் தற்காலிகமாக வெற்றிபெற்றதிலோ எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை. அதில் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் பா.ஜ.க வென்றதுதான் வேதனையாக உள்ளது. நாங்களும், நீங்களும் சிந்திக்க வேண்டிய விஷயம் பா.ஜ.க ஒரு தொகுதியில் வென்றது எப்படி என்பதைப்பற்றிதான். பெரிய வெற்றியை அடைந்த காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப்-க்கு வாக்கு சதவிகிதம் குறைந்தது எப்படி என ஆராய்ந்துபாருங்கள். வெற்றி கிடைத்துவிட்டது என அதிக அகங்காரம் கொள்ள வேண்டாம். பல இடங்களிலும் உங்களுக்கு ஆதரவளித்த சக்திகள் (சிறுபான்மையினர்) திருச்சூரில் உங்களுடன் நிற்கவில்லை.பினராயி விஜயன்
தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். நாங்கள் எப்போதும் மக்களுடன் இருப்போம். இது இறுதி தோல்வி அல்ல" என்றார். இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், "எங்களுக்கு வாக்குகள் குறைந்தது பற்றி விசாரிப்போம். கல்யாசேரியிலும், மட்டனூரிலும் வாக்குகள் குறைந்ததும், திருச்சூரில் அந்திக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.எம் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு சென்றது குறித்தும் முதல்வர் விசாரணை நடத்த வேண்டும்" என்றார் பதிலுக்கு.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T88hkV
Wednesday, 12 June 2024
Home »
» "காங்கிரஸ் வென்றதில் அல்ல, பாஜக வென்றதுதான் வேதனையாக உள்ளது!" - பினராயி விஜயன் ஓப்பன் டாக்