கரு.நாகராஜன்
கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருக்கும் இந்தக் கருத்து வாக்களித்த மக்களை அவமதிப்பதுபோல இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள், தங்களுக்கு நல்லது செய்யும் பா.ஜ.க கூட்டணிக்கு 293 இடங்களில் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதன் மூலமாகவே, பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. மக்களின் ஆசையில் மண்ணை அள்ளிப்போடுவதுபோல இருக்கிறது அவரின் கருத்து. அரசியலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படிப் பரபரப்பாக எதையாவது சொல்வது சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கம். அவரும் ஒருகாலத்தில், ‘பெரும்பான்மை இல்லாத அரசில்’ மத்திய அமைச்சராக இருந்தவர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் அமைச்சராக இருந்தபோது, ஒரு பெரிய கட்சி ஆதரவைத் திரும்பப் பெற்றதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. ஆனால், தற்போது ஒரு வலுவான கூட்டணியுடன் பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கிறது. அந்தப் பொறாமையில்தான் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக இந்த அரசு ஐந்தாண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். நாட்டின் வளர்ச்சிக்குப் பிரதமர் மோடி பாடுபடுவார். அதற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். சுவாமி சொல்வதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.”இனியன் ராபர்ட்
இனியன் ராபர்ட், மாநிலச் செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“அவர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. பா.ஜ.க-வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பலவும் பா.ஜ.க-வின் கொள்கையில் முரண்பாடுகொண்ட கட்சிகளே. இப்போது அவர்கள் அமைத்திருக்கும் கூட்டணியும் கொள்கைப் பிடிப்பில் அமைந்த கூட்டணி அல்ல... தேவையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி. `ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை’ என்று முன்பு பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு, இந்த முறையும் அதே கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, `நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று நிதிஷ் வலியுறுத்துவார். இந்த இரண்டையும் செய்வதற்கு பா.ஜ.க முன்வருவது சந்தேகம்தான். தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திராவில் ஆட்சி நடத்த பா.ஜ.க-வின் துணை துளியும் தேவையில்லை. அதேபோல, ஷிண்டே, நிதிஷ் இருவரும் இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிர மாநிலத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள். அதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியைப் பொறுத்து மத்தியில் கூட்டணியை மாற்றிக்கொள்ள அவர்களும் யோசிக்க மாட்டார்கள் என்பது பா.ஜ.க-வுக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு சிக்கல் நிறைந்த இந்த மைனாரிட்டி அரசு ஒன்றரை ஆண்டைத் தாண்டினாலே பெரிய விஷயம்தான்.”
http://dlvr.it/T8JPXw
Saturday, 15 June 2024
Home »
» “இந்த அரசு நிற்காது; அடுத்த மார்ச்சுக்குள் தேர்தல் வரும்” என்ற சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனம்?