உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வங்கியில் வேலை செய்து வருவதாக கூறிய ஒருவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். அவரிடம் தனக்கு வேலையில்லாததையும், தன் குடும்ப சூழ்நிலையையும் கூறி தனக்கு வேலை வாங்கித் தரும்படி கோரிக்கை வைத்திருக்கிறார். அவரும் நிச்சயம் உனக்கும் வங்கி ஒன்றில் வேலை வாங்கித் தருகிறேன். வேலையில் சேர்வது தொடர்பாக நீ டேராடூன் வரை வரவேண்டி இருக்கும். என் நண்பன் உன்னை டேராடூன் அழைத்து வருவான் என, தனது நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பாலியல் வன்கொடுமை
அந்த பெண்ணும் வங்கியில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் டேராடூன் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருவரும் இணைந்து டேராடூன் சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் சில காரணங்களை கூறி டேராடூனில் தற்பொழுது சந்திக்க இயலாது. மீண்டும் உத்திரபிரதேசத்திற்கு திரும்பி வரும்படி கூறியிருக்கிறார். உத்திரபிரதேசம் திரும்பிய அவர்கள், ஷாம்லி நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசி இருக்கின்றனர். அப்பொழுது மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்க்ஸ் -ஐ அந்தப் பெண்ணுக்கு கொடுத்து இருக்கின்றனர். அந்த பெண் மயங்கியதும் ஓட்டலுக்கு அழைத்து சென்று நண்பர்கள் இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
மயக்கம் தெளிந்ததும் , தனக்கு நடந்த கொடுமைகளை அறிந்த அப்பெண் உத்திரப்பிரதேச காவல் நிலையத்தில் அது குறித்து புகார் அளித்திருக்கிறார். பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T8NZPb
Monday, 17 June 2024
Home »
» இன்ஸ்டா நட்பு; நம்பி சென்ற பெண்; மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த இருவர் - உ.பி அதிர்ச்சி