18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் தேர்வு ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் நாற்காலியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது.மோடி
சபாநாயகர் தேர்வுசெய்யப்படும்வரை, தற்காலிக சபாநாயகர் அவையை நடத்துவார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளமும் மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டுமென்று கேட்டுவருகின்றன. ஆனால், சபாநாயகர் பதவியை விட்டுத்தர பா.ஜ.க தயாராக இல்லை.
மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியதும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவரும் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் பிரிவு 93 கூறுகிறது. ஆனாலும், அதற்கான காலவரையறை எதுவும் குறிப்பிடப்படவில்லை. சந்திரபாபு நாயுடு
சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம், ஜே.டி.யூ ஆகிய இரண்டு கூட்டணிக் கட்சிகளும் குறிவைப்பதற்கு காரணம் இருக்கிறது. அந்தப் பதவியை விட்டுத்தர முடியாது என்று ஆளும் பா.ஜ.க அடம்பிடிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை நடவடிக்கைகளின் போக்கைத் தீர்மானிப்பது உள்பட பல விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயருக்கு உண்டு. பல வகைகளில், அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகவும் இது இருக்கிறது.
மக்களவை நடவடிக்கைகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது. அவையில் கேள்வி எழுப்பவும், எந்தவொரு பிரச்னை குறித்து விவாதிக்கவும் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முன்அனுமதி பெற வேண்டும். ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உறுப்பினர்களின் பேச்சுகளை முழுமையாகவோ , பகுதியாகவோ நீக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கே உண்டு. தொழிலதிபர் கெளதம அதானிக்கும் பிரதமர் மோடிக்குமான தொடர்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்தச் சூழலில், ராகுல் காந்தியின் அந்தப் பேச்சின் பெரும்பாலான பகுதிகள் சபாநாயகரால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.ஏக்நாத் ஷிண்டே
ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தாவும் நடவடிக்கை மூலமாக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்க முடியும். அது, அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகவே, இந்தியாவின் பல கட்சி ஜனநாயகத்தைப் பாதுககாப்பதற்கான கருவியாக அரசிலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடை) அறிமுகப்படுத்தப்பட்டது.Ajit Doval: மீண்டும் அஜித் தோவல், பி.கே.மிஸ்ரா... பிரதமர் மோடிக்கு பக்கபலமாக நீடிப்பதன் பின்னணி!
அதாவது, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுவதைத் தடுப்பதற்காக 1985-ம் ஆண்டு கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், ஒரு கட்சியைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வேறொரு கட்சிக்கு மாறினால், இந்தச் சட்டத்தின்படி அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய முடியாது. தகுதிநீக்கம் தொடர்பான விவகாரத்தில் சபாநாயகரின் முடிவே இறுதியானது.ஓம் பிர்லா
இவ்வளவு அதிகாரங்கள் சபாநாயகருக்கு இருக்கும் நிலையில், சபாநாயகர் பதவியில் இருப்பவர்கள், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், பாரபட்சமாகவும் செயல்படுகிறார்கள் என்ற விமர்சனமும் இருக்கிறது. மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது, தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பலரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நின்றனர். அதைத் தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி அரசு வீழ்த்தப்பட்டது.
சிவசேனாவுடன் நீண்டகாலம் கூட்டணியில் இருந்த பா.ஜ.க-தான், சிவசேனாவை உடைத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்யைக் கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைவதற்கு காரணாமக இருந்தது என்று விமர்சனம் எழுந்தது. இதைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்ட சிவசேனா (உத்தவ்) தலைவர் ஆதித்யா தாக்கரே, பா.ஜ.க அதிகாரத்துக்கு வந்தவுடன், கூட்டணிக் கட்சிகளை பலவீனப்படுத்தும் வேலைகளைச் செய்யும் என்று குறிப்பிட்டிக்கிறார். மேலும், தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் மக்களவை சபாநாயகர் பதவியைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். நிதிஷ் குமார்
வழக்கமாக, மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான் தேர்வுசெய்யப்படுவார் என்றாலும், கூட்டணியில் ஆட்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மக்களவையில் சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஜி.எம்.சி.பாலயோகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் சூழலே வேறு. அதனால், மக்களவை சபாநாயகர் பதவியை அவ்வளவு எளிதாக கூட்டணிக் கட்சிகளுக்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்துவிடாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.!
இது ஆளும் கூட்டணி நிலை... மறுபக்கம் இந்தியா கூட்டணி சபாநாயகர் தேர்வில் ஒரே கருத்துடன் இருக்கிறார்களா என்பது குறித்தும் விவாதங்கள் கிளம்பியுள்ளது. தற்போது வரை எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ரேஸ் குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் தற்போது இந்தியா கூட்டணி வலுவான எதிர் கூட்டணியாக இருப்பதால், அவர்களும் தங்களின் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T8JdPb
Saturday, 15 June 2024
Home »
» அனல் பறக்கும் மக்களவை சபாநாயகர் ரேஸ்... இந்தியா கூட்டணி பிளான் என்ன?!