பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, தனக்கு ஆதரவளிக்கும் எம்.பி-க்களின் பட்டியலுடன் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்படி ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணியளவில் மோடி (Modi) தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகவிருக்கிறார்.மோடி
இதற்கிடையில், புதிய நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ கூட்டணி எம்.பி-க்கள், கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மோடி, இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை தலையில் தொட்டு வணங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைதளங்களிலும் பரவின.
Modi: `கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது!' - மோடி
இந்த நிலையில், பிரதமர் மோடி (Modi) தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அரசியலமைப்பு புத்தகத்தை தான் தலையில் தொட்டு வணங்கும் படத்தைப் பதிவிட்டு, ``டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.அரசியலமைப்பு
என்னைப் போன்ற ஏழ்மை மற்றும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்த நாட்டுக்கு சேவைசெய்ய முடியுமென்றால் அதற்கு இந்த அரசியலமைப்பு சட்டம்தான் காரணம். இது நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையையும், வலிமையையும், கண்ணியத்தையும் அளிக்கிறது" என்று ட்வீட் செய்திருக்கிறார்.அமித் ஷா - மோடி
முன்னதாக கடந்த ஆட்சியில் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாக இருந்த பாஜக அரசு, கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC - Indian Penal Code) பெயரை பாரதிய நியாய சன்ஹித' எனவும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC - Criminal Procedure Code) பெயரை `பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹித' எனவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA - Indian Evidence Act) பெயரை `பாரதிய சக்ஷய' எனவும் இந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலும் பெற்றது. இது ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அகங்காரம், அராஜகம், அத்துமீறல்; பஞ்சாப், ஹரியானா, உ.பி-யில் மோடி அலையை புஷ்வாணமாக்கிய விவசாயிகள்!
http://dlvr.it/T80fR9
Saturday, 8 June 2024
Home »
» `என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அர்பணிக்கப்பட்டிருக்கிறது!' - அரசியலமைப்பை தலையில் தொட்டு வணங்கிய மோடி