இந்தியாவை அடுத்த யார் ஆளப்போகிறார்கள் என்கின்ற பலரின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி தேர்தலும் நடந்து முடிந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது.
இச்சூழலில் தேசியக் கட்சிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத சிறு சிறு கட்சிகள் என அனைவரும் தீவிரமாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். தேர்தல் நடந்து முடிந்த இத்தகு சூழலில், இந்திய ரிசர்வ் வங்கி தற்போது நடந்து முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இம்மக்களவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் செலவிட்ட ரொக்கத் தொகையை 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பீடு செய்யும்போது, அது 22 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.நாடாளுமன்றத் தேர்தல் 2024
2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டத்தில் ரூ.72,680 கோடி அளவுக்குப் ரொக்கம் செலவிடப்பட்டு, கணக்கில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது முதல், தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 7-ம் தேதி வரை அமலில் இருந்ததுவரை 89,080 ரூபாய் கணக்கில் பதிவாகியிருக்கிறது. இந்தத் தொகை கடந்த 2019 தேர்தலோடு ஒப்பீடு செய்யும்போது 22 சதவிகிதம் அதிகம்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகளின் தாக்கங்களினாலும், பொருளாதார சமநிலையின்மை மற்றும் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட அடிப்படை காரணிகளினாலும், அத்தோடு இந்த இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் பணவீக்கம் அதிகரித்ததின் விளைவாகவும் செலவுகள் அதிகரித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி 12.06.2024 புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 07, 2024 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.35.87 லட்சம் கோடியாக இருந்தது. நடைமுறை சிக்கல்கள் காரணமாக மத்திய அரசு மே 2023-ல் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றுக்கொண்டபோதிலும், புழக்கத்தில் உள்ள நாணயத்தின் மதிப்பு சற்றே குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 75.1 விழுக்காடு புழக்கத்திலுள்ள பணத்தின் வளர்ச்சி, ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால், 2023-2024-ல் 7.8 சதவிகிதத்தில் இருந்து 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.ரிசர்வ் பேங்க் - RBI
தற்போது வெளியாகியுள்ள ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி செலவுக்கும், புழக்கத்தில் உள்ள ரூபாய் மதிப்பிற்குமிடையே மிக நேர்த்தியான தொடர்பைக் காட்டுகின்றது. ஆனால் தற்சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், இந்த சமநிலையின்மை ஏற்படுவதாகவும், இதனால் செலவிற்கும் இருப்பிற்கும் இடையேயான இணைப்பு வலுவிழந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொற்றுநோய், நிச்சயமற்ற தன்மை, பணமதிப்பிழப்பு, பொருளாதார மந்தநிலை மற்றும் ஏற்ற இறக்க செயல்முறைகள் மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவற்றால் GDP விகிதம் சீராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்தோடு "முந்தைய சில தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதால், புரொமோசன் செலவுகள், விளம்பரங்கள், இன்ன பிற செலவுகள் என இத்தேர்தலுக்கு செய்யும் செலவின் தொகை, கடந்த தேர்தலைக் காட்டிலும் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது" என ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbDarshan Thoogudeepa Case: `யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை' - நடிகை திவ்யா ஸ்பந்தனா
http://dlvr.it/T8H5WG
Friday, 14 June 2024
Home »
» Election 2024: ரூ.89,080 கோடியை ரொக்கமாக செலவளித்த கட்சிகள்; 22% அதிகரித்த தேர்தல் செலவு- RBI தகவல்!