மேற்கு வங்கத்தில் இன்று காலை கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில்மீது, சரக்கு ரயில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், சரக்கு ரயிலின் லோகோ பைலட், பயணிகள் ரயிலின் காவலர் மற்றும் பயணிகள் என 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.Kanchanjunga Express Collide
இதில், அரசு ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை அறிவிக்க, மறுபக்கம் இந்த விபத்துக்கு மோடி அரசே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில், பயணிகள் பற்றி ரயில்வே அமைச்சகத்துக்கு கவலையில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருக்கிறார்.
விபத்து தொடர்பாக தனியார் ஊடகத்திடம் பேசிய மம்தா பானர்ஜி, ``ரயில்வே அமைச்சகத்துக்கு பயணிகள் பற்றி கவலையில்லை. ஏன்... ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பொறியாளர்கள், ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிலாளர்கள் பற்றிகூட அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களும் சிக்கலில் இருக்கின்றனர். அவர்களுக்கான பழைய ஓய்வூதியமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.மம்தா பானர்ஜி
எனவே நான் முழுக்க முழுக்க ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பக்கம் நிற்கிறேன். அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த அரசு தேர்தலைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. எப்படி ஹேக் செய்வது, எப்படி சூழ்ச்சி செய்வது, தேர்தலில் எப்படி தில்லு முள்ளு செய்வது என்று மட்டுமே யோசிக்கிறது'' என்று கூறினார்.ராகுல் காந்தி
இன்னொருபக்கம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில்வே விபத்துகள், மோடி அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கின் நேரடி விளைவு. இதனால் நாள்தோறும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகள் பறிபோகிறது. இதற்கு இன்றைய விபத்து மற்றுமொரு உதாரணம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இந்த அப்பட்டமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் மற்றும் இந்த விபத்துகளுக்கு மோடி அரசைப் பொறுப்பேற்கச் செய்வோம்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.Kanchanjunga Express Collide: பயணிகள் ரயில்மீது மோதிய சரக்கு ரயில்.. பலியான 15 பேர்! - என்ன நடந்தது?
http://dlvr.it/T8Nyqt
Monday, 17 June 2024
Home »
» Kanchanjunga Express Collide: `ரயில்வே அமைச்சகத்துக்கு பயணிகள் பற்றி கவலையில்லை!' - மம்தா காட்டம்