மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்தினரையும் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி குக்கி சமூகத்தினர் கடந்த ஆண்டு மே மாதம் முன்னெடுத்த போராட்டம், இரு சமூகத்தினருக்கிடையேயான வன்முறையாக வெடித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் இந்த மோதல் நீடித்துக்கொண்டிருக்கிறது.மணிப்பூர்
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க இன்னும் இதைக் கட்டுப்படுத்தாததே வன்முறை நீடிப்பதற்கு காரணம் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை காங்போக்பி மாவட்டத்தில் முதல்வர் பிரேன் சிங் பாதுகாப்பு வாகனத்தின்மீது கலவரக்காரர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
Manipur : `முதல்வர்மீதான தாக்குதல்... மக்களின்மீதான நேரடி தாக்குதல்!' - மணிப்பூர் முதல்வர்
இந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரேன் சிங் தனது X சமூக வலைதள பக்கத்தில், ``நாட்டுக்கு இரவு பகலாக சேவையாற்றிவரும் பாதுகாப்பு படையினர்மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு திரும்புகையில், முதல்வர்மீது தாக்குதல் நடத்துவது நேரடியாக மக்களின்மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம் என்றும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேன் சிங் தெரிவித்தார்.பா.ஜ.க-வை விரட்டியடித்த மணிப்பூர் மக்கள்!
http://dlvr.it/T85J92
Monday, 10 June 2024
Home »
» மணிப்பூர்: முதல்வர் கான்வாய்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்- கண்டனம் தெரிவித்த முதல்வர்| Manipur