3-வது முறையாக நாட்டின் பிரதமராக, இன்று பதவியேற்றிருக்கிறார் மோடி. அவருடன் 71 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (36), அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை. ராம் மோகன் நாயுடு குடும்பத்துடன்
யார் இந்த ராம் மோகன் நாயுடு?
பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற ராம் மோகன் நாயுடு, லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். ராம் மோகன் நாயுடுவின் தந்தை, முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-யான மறைந்த கே யர்ரான் நாயுடு. இவர் 1996,1998 க்கு இடையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தார். இவரின் மாமா கே அட்சேன் நாயுடு தெக்கலி எம்.எல்.ஏ-வாகவும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.
ராம் மோகன் நாயுடு படிப்பு முடித்து, சிங்கப்பூரில் தொழிலதிபராக இயங்கினார். ஆனால் 2012- ல் முன்னாள் மத்திய அமைச்சர் கே.யெர்ரன் நாயுடு சாலை விபத்தில் இறந்ததால், ராம் மோகன் நாயுடு இந்தியா வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடந்து, ராம் மோகன் நாயுடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, இரண்டே ஆண்டுகளில், அதாவது 2014-ல் ஸ்ரீகாகுளத்திலிருந்து, 16-வது மக்களவையில் இரண்டாவது இளம் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26.ராம் மோகன் நாயுடு
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடனான நெருங்கிய தொடர்பு ராம் மோகன் நாயுடுவின் அரசியலில் பெரியளவில் உதவியது. அதனால், ராம் மோகன் நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது, டெல்லியில் நாரா லோகேஷ் உடன் இணைந்து முக்கிய தலைவர்களின் ஆதரவை கோரி தீவிரமாக செயல்பட்டார். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக 2020-ம் ஆண்டு சன்சத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbPM Modi Oath Ceremony : `நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்...' - 3-வது முறையாக பிரதமரானார் மோடி - Modi Sworn In | Live
http://dlvr.it/T82xw4
Sunday, 9 June 2024
Home »
» Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு?