சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்தி முடிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக பிரேம்சிங் தமாங்(Prem Singh Tamang) பதவியேற்றார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய், நாம்ச்சி சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு, சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) வேட்பாளர் பிமல் ராயை தோற்கடித்து வென்றார். அதைத் தொடர்ந்து கடந்த புதன் கிழமை புதிய எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.கிருஷ்ணகுமாரி ராய்
இந்த நிலையில், பதவியேற்ற அடுத்த நாளே பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அவருடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் எம்.என் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சட்டசபை செயலாளர் லலித் குமார் குருங் உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு பதவியேற்கும் விழாவுக்கு சென்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங், அங்கு உரையாற்றினார்.
அப்போது, தன் மனைவியின் ராஜினாமா குறித்து, ``கட்சியின் நலன், நல்ல நோக்கங்களுக்கு முன்னுரிமையளித்து, கட்சியின் ஏகோபித்த முடிவுக்கு இணங்க என் மனைவி ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை சிக்கிமின் அன்பான மற்றும் மரியாதைக்குரிய மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். எஸ்.கே.எம் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் வேண்டுகோளின்படி, அவர் எங்கள் கட்சியின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டார்.சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்
எங்கள் கட்சியின் சார்பில், தலைவராக , அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் என் மனைவி கிருஷ்ணா ராய் உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருப்போம். விரைவில் புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்து தொகுதி பயனடைவதை உறுதிசெய்வோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுப்பு!' - சிக்கிம் முதல்வரின் அறிவிப்புக்கு காரணம் என்ன?
http://dlvr.it/T8FxdQ
Friday, 14 June 2024
Home »
» Sikkim: பதவியேற்ற மறுநாளே ராஜினாமா... மனைவியின் முடிவுக்கு விளக்கம் சொன்ன சிக்கிம் முதல்வர்!