கேரள மாநிலத்தில் பா.ஜ.க காலூன்ற காரணமான திருச்சூர் எம்.பி நடிகர் சுரேஷ்கோபி, மத்திய இணை அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். அதன் பிறகு நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, "ஒரு எம்.பி-யாகவே செயல்பட முடிவுசெய்துள்ளேன். நான் டெல்லி தலைமையில் எதுவுமே கேட்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறியிருந்தேன். அமைச்சரவையில் இருந்து என்னை விரைவில் விடுவிப்பார்கள் எனத் தோன்றுகிறது. தாமதப்படுத்தாமல் என்னை விடுவிப்பார்கள். திருச்சூர் மக்களுக்கு எம்.பி என்ற நிலையில் சிறப்பான செயல்பாட்டை காட்டுவேன். நான் சினிமாவில் நடித்தே தீருவேன். மற்ற விஷயங்கள் குறித்து தலைமை தீர்மானிக்கட்டும்" எனக் கூறினார். கேபினெட் அமைச்சர் பதவி வழங்காத அதிருப்தியில் சுரேஷ் கோபி இவ்வாறு கூறுவதாக விமர்சனம் எழுந்தது. மேலும், கேரளாவைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் சுரேஷ் கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுரேஷ் கோபி-யின் முகநூல் பதிவு
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே பதவியை துறக்க தயாரான சுரேஷ் கோபியின் நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் கூறுகையில், "சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில்தொடர வேண்டும். அவர் கேரளாவில் பா.ஜ.க-வின் கணக்கை தொடங்கியதால்தான் இரண்டு இணை அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார்.பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி
பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய இணை அமைச்சர் பதவியில் தொடர்வதாக சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் கோபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகபோவதாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்குப் பெருமையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 2 நாள்களாக நடந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbSuresh Gopi: `சினிமாவில் நடித்தே தீருவேன்' - கேபினெட் பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி அதிருப்தியா?
http://dlvr.it/T84vN7
Monday, 10 June 2024
Home »
» Suresh Gopi: `நான் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேனா?' - சுரேஷ் கோபி விளக்கம்!